பிரேசிலின் தொழில்முறை கால்பந்து லீக்கான பிரசிலீரோ சீரி A தொடரில் ஆடும் கொயாஸ் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சாவோ போலோ அணிக்கு எதிரான போட்டி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) கொயாஸ் கழகம் தொடரில் தனது முதல் போட்டியில் ஆடுவதற்கு தயாரான நிலையிலேயே இந்த எதிர்பாராத சிக்கலுக்கு முகம்கொடுத்துள்ளது.
பொலிஸ் இலகு வெற்றி; இறுதி நிமிடத்தில் சீ ஹோக்கை சமநிலை செய்த செரண்டிப்
போட்டி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் இருக்கும்போதே 26 பேர் கொண்ட தமது குழாமில் 10 வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக கொயாஸ் கழகம் அறிவித்துள்ளது. இந்த பத்து வீரர்களில் ஒன்பது பேர் அன்றைய போட்டியில் விளையாட தயாராக இருந்தவர்களாவர்.
இதில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட மருத்துவ சோதனை முடிவுகளை பிரேசில் கால்பந்து சம்மேளனம் செல்லுபடியற்றதாக அறிவித்தது.
இதனால் அடுத்த சுற்று மருத்துவ சோதனை அடுத்த தினம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் போட்டி ஆரம்பிப்பதற்கு 24 மணி நேரத்திற்கு குறைவான காலத்தில் வெளியானதாலேயே அந்தப் போட்டியை இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், போட்டி நடத்தப்படுவது குறித்து நிச்சயமில்லாத சூழலில் வீரர்கள் மைதானத்திற்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். எனினும் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு போட்டி ஆரம்பிப்பதற்கு சற்று முன்னரே அதனை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரினௌன் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நியூ ஸ்டார்
பிரேசில் கால்பந்து சம்மேளனத்தின் மருத்துவ ஆணையாளர் ஜோர்ஜ் பொகுரா இது பற்றி விளையாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “கொயாஸ் அணியின் பத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் சோதனை முடிவு கிடைத்த விரைவிலேயே நாம் கொயாஸ் அணி மருத்துவக் குழுவை தொடர்புகொள்ள ஆரம்பித்தோம்.
பதில் சோதனையை நடத்துவதற்கு கொயாஸ் எம்மை கேட்டுக்கொண்டது. அந்த முடிவு வரும் வரை நாம் காத்திருந்தோம்.
போட்டியை இழப்பதை தவிர்ப்பதற்கு நாம் அதிக பட்ச நேரம் காத்திருந்தோம். முடிவு எடுக்க வேண்டிய நேரம் நெருங்கியபோது 10 வீரர்களுக்கு கொரோனா தொற்றி இருக்கும் முடிவு கிடைத்தது. அந்த நேரத்திலே சுகாதாரத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.
FFSL தலைவர் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்த புளூ ஸ்டார்
கொயாஸ் கழகத்தின் மூலம் செய்யப்பட்ட பதில் சோதனையின் முடிவு போட்டி ஆரம்பிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே கிடைத்ததாகவும் ஆரம்ப அணியில் உள்ள ஒன்பது பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானதாகவும் அந்தக் கழகத்தின் தலைவர் மார்சிலோ அல்மெய்டா தெரிவித்தார்.
போட்டியை நடத்தாமல் இருக்கும் முடிவை சாவோ போலோ அணி ஏற்றுக்கொண்டுள்ளது.
“கொயானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த போட்டியை ஒத்திவைக்கும் முடிவுக்கு சாவோ போலோ தமது ஆதரவை வெளியிடுவதோடு அதனை ஏற்கிறது” என்று அந்தக் கழகம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
ஜுவன்டஸ் பயிற்சியாளர் மவுரிசியோ சாரி அதிரடி நீக்கம்
“சுகாதாரம் மற்றும் சமூகத்தை பாதுகாப்பதே இந்த நேரத்தில் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
பிரேசில் சீரி A போட்டிகள் கடந்த மே மாதம் ஆரம்பித்து வரும் டிசம்பரில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்தத் தொடரை 2021 ஆம் ஆண்டு ஆரம்பப் பகுதி வரை நீடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்து உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் பிரேசிலில் மூன்று மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<