PSG அணியிலிருந்து வெளியேறுகிறார் அல்வேஸ்

354

பெரு அணிக்கு எதிரான கோப்பா அமெரிக்கா கிண்ணத்தில் 5-0 என பிரேசில் அணி வெற்றி பெற்ற நிலையில், அதில் கோல் புகுத்தி சில மணி நேரத்திற்குள் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியில் இருந்து வெளியேறும் அறிவிப்பை பிரேசிலின் டானி அல்வேஸ் வெளியிட்டுள்ளார்.

கோப்பா அமெரிக்கா காலிறுதியில் பிரேசில், வெனிசுவேலா

பெரு அணிக்கு எதிராக 5-0 என கோல் மழை பொழிந்த பிரேசில் அணி மற்றும் 3-1 கோல்…

பிரேசில் அணியின் தலைவராக உள்ள 36 வயதுடைய அல்வேஸ் பிரான்ஸ் சம்பியனான PSG கழகத்துடன் இரண்டு பருவங்கள் ஆடிய நிலையில் அந்த அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்திருந்தது.  

“அனைத்துக்கும் ஆரம்பம், நடு, இறுதி உள்ளது. முற்றுப்புள்ளி வைப்பதற்கு நேரம் வந்துவிட்டது” என்று அல்வேஸ் இன்ஸ்டாகிரமில் குறிப்பிட்டுள்ளார்.   

எனினும் அவர் அடுத்து எங்கு செல்வது என்பது பற்றி வெளிப்படுத்தவில்லை. PSG அணியின் புதிய பணிப்பாளராக கொம்பட்ரியோ லியனார்டோ திரும்பிய நிலையிலேயே இந்த விலகல் இடம்பெற்றுள்ளது.   

அதேபோன்று PSG அணியின் நட்சத்திர வீரரான நெய்மாரின் எதிர்காலம் பற்றி கேள்விகள் எழுந்து வரும் நிலையிலேயே இந்த வெளியேற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் அதிக விலை கொண்ட வீரரான நெய்மார் காயம் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோப்பா அமெரிக்கா தொடருக்கு பிரேசில் அணியில் நெய்மார் இல்லை

கட்டாருக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்ற பிரசிலியாவில்…

கடந்த 2017ஆம் ஆண்டு நெய்மர் ஒப்பந்தமாக அதே காலத்திலேயே அல்வேஸும் PSG அணியுடன் இணைந்தார்.  இதுவரை 111 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் அல்வேஸ் இதற்கு முன்னர் பிரேசிலின் பாஹியா, செவில்லா மற்றும் ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் ஜுவான்டஸ் கழகங்களுக்கு ஆடியுள்ளார்.

PSG அணியுடனான அல்வேஸின் இரண்டு பருவங்களில் அந்த அணி அடுத்தடுத்து ”லீக் 1” கிண்ணத்தை வென்றதோடு லீக் கிண்ணம் மற்றும் பிரெஞ்ச் கிண்ணங்களையும் வென்றது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<