சுனாமி தினத்தில் உணர்ச்சிவசப்பட்ட தினேஷ் சந்திமல்

3467
Dinesh Chandimal

போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் தென்னாரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் முதல் இன்னிங்சுக்காக துடுப்பாட ஆடுகளம் பிரவேசித்த இலங்கை அணியின் துணைத் தலைவர் தினேஷ் சந்திமல், 12 ஆண்டுகளுக்கு முன்னர் 2004ஆம் ஆண்டு சுனாமி ஆழிப்பேரலையால் தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த பேரிடரை நினைவு கூர்ந்துள்ளார்.

அம்பலங்கொடை பகுதியில் அமைந்திருந்த தினேஷ் சந்திமல்லின் வீடு சுனாமி ஆழிப்பேரலையால் அழிவுற்றதோடு, அவரின் தந்தையின் வாழ்வாதாரமும் முற்று முழுதாக சிதைவடைந்தது. அதிஷ்டவசமாக எவ்விதமான உயிரிழப்புக்களும் அவருடைய குடும்பதினருக்கு ஏற்படவில்லை. எனினும், அந்நேரத்தில் 14வயது சிறுவனாக இருந்த தற்போதைய இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் சந்திமலுக்கு குறித்த இயற்கை அனர்த்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த சம்பவம் பற்றி தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தினேஷ் சந்திமல் ‘’அது ஒரு மிகவும் பயங்கரமான அனுபவமாக என்னுடைய முழு குடும்பத்தினருக்கும் அமைந்திருந்தது’’ என்றார்.

இரண்டாம் நாள் ஆட்டம் தென்னாபிரிக்க அணியின் கட்டுப்பாட்டில்

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையில் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று, தனது முதலாம் இன்னிங்சுக்காக துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணி, போதிய வெளிச்சமின்றி ஆட்டம் இடைநிறுத்தப்படும் பொழுது, 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, தென்னாபிரிக்க அணியைவிட இன்னும் 105 ஓட்டங்களால் பின்னிலையுற்ற நிலையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் காணப்படுகிறது.

 

மேலும், “அந்த நேரத்தில் எனக்கு 14வயதாக இருந்தது. சுனாமியின் பின்னர் எங்களிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்து விட்டோம். மீண்டும் அதே நிலைக்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டியினை பார்க்க அதிகாலை 3 மணிக்கு எழும்பியது ஞாபகம் இருக்கிறது”  

‘’திடீரென்று சுனாமி தாக்கியதால் எமது வீட்டினை இழந்தோம். அதே நேரம் நேபால் நாட்டில் இடம்பெறவிருந்த 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகளுக்கான அணித்தெரிவு அடுத்த நாள் இருந்தது. அவ்வாறான ஒரு நிலையில், நான் என்னுடைய கிரிக்கெட் உபகரணங்கள் அனைத்தையும் இழந்து விட்டேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனினும், நண்பர்களிடம் இரவல் வாங்கி அணித்தேர்விற்கு சென்றேன்’’   என்றார்.  

குறித்த அணித்தெரிவில், தினேஷ் சந்திமல் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டதோடு  அணித் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து, தனது திறமைகளை வளர்த்துக்கொண்ட சந்திமல், பிற்காலத்தில் துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் ஓய்வின் பின்னர் இலங்கை அணியின் பிரதான துடுப்பாட்ட வீரராக உருப்பெற்றிருக்கிறார்.   

Galle Test Cricket Ground   அந்த அனர்த்தம் இடம்பெற்று எழு ஆண்டுகளுக்குப் பின்னர், குறித்த அதே நாளில் டேர்பனில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாரிக்காவுக்கு எதிரான போட்டியில் அறிமுக டெஸ்ட் வீரராக இலங்கை தேசிய அணியில் சந்திமல் களமிறங்கினார்.  

அறிமுக வீரராக களமிறங்கிய தொடரிலேயே தினேஷ் சந்திமல் இரண்டு அரை சதங்களை பெற்றதுடன் தென்னாபிரிக்காவின் சொந்த மண்ணில் அவர்களுக்கு எதிரான முதல் வெற்றியை இலங்கை அணி பெற்றுக்கொள்வதற்கும் வழி வகுத்தார்.  

இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும்பொழுது, “அந்த நாள் எனக்கு கொஞ்சம் உணர்வுபூர்வமான நாள். ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடந்தது என்று யோசித்தேன். அத்துடன் நீண்டதொரு கடின பாதையினை கடந்து வந்துள்ளேன். மிகவும் நன்றாக விளையாட வேண்டுமென்று உறுதியாக இருந்தேன். வலிமைமிக்க தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் வெளிப்படுத்திய திறமைகள் குறித்து நான் திருப்தி அடைகின்றேன்.  

தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் அறிமுகமாவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நான் அணியில் இடம்பிடித்திருந்தேன். 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில், செஞ்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டிக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அந்த போட்டியில் அணி மிகவும் மோசமாக தோல்வியுற்றதன் பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக மிகவும் கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டோம். அதன் பின்னர் இரண்டாம் போட்டி நடைபெற்ற டர்பன்னில் எல்லாமே எங்களுக்கு சாதகமாக அமைந்தது. குறித்த போட்டியில் நான் இடம் பெற்றதை மிகவும் கௌரவமாக நினைக்கின்றேன். அத்துடன், அந்த போட்டியில் தென்னாபிரிக்க மண்ணில் முதல் தடவையாக அவர்களை வெற்றி கொண்டோம்.”   Chandimal  

”முதல் இன்னிங்சில் திலான் சமரவீர மற்றும் இரண்டாவது இன்னிங்சில் குமார் சங்கக்காரவுடன் இணைந்து இரண்டு முக்கியமான இணைப்பட்டங்களில் ஈடுபட்டமை நன்றாக ஞாபகம் இருக்கின்றது. குறித்த போட்டியில் இருவரும் சதம் பெற்றுக்கொண்டதோடு, அந்த போட்டியில் நாங்கள் வெளிப்படுத்தி இருந்த திறமைகள் குறித்து மிகவும் திருப்தி அடைந்திருந்தோம்.  

கிராமிய மட்ட கிரிக்கெட்டை ஊக்குவிக்க அதிக கரிசனை செலுத்துங்கள் : சுரங்க லக்மால்  

கிராமிய மட்ட கிரிக்கெட்டை ஊக்குவிக்க அதிக கரிசனை செலுத்துங்கள் : சுரங்க லக்மால்

போர்ட் எலிசபெத் நகரில், ‘பொக்சிங் டே’ என அழைக்கப்படும் டிசம்பர் 26ஆம் திகதி, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. இதன் முதலாம் நாள் ஆட்ட நிறைவின் போது, தனது சிறப்பான பந்து வீச்சு மூலம் இலங்கை அணியினை வலுப்படுத்தியுள்ளார் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால்.

அதே நேரம், ஏனைய வீரர்களும் திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர். ஷானக்க வெலகெதர முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் அந்த போட்டியில் மொத்தமாக ஒன்பது விக்கெட்டுகளையும் வீழ்த்தியதோடு, ஒரே அணியாக இணைந்து தென்னாபிரிக்க அணியை அவர்களது மண்ணிலேயே வீழ்த்தினோம்.   

அந்த போட்டியில் நான் விக்கெட் காப்பாளராக செயல்பட்டேன். இலங்கை அணி சார்பாக 122ஆவது டெஸ்ட் வீரராக இணைத்துக்கொள்ளப்பட்டேன். அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட அந்த போட்டி, வரலாற்று சிறப்பு மிக்க போட்டியாக அமைந்தமை குறித்து மிகவும் சந்தோசப்படுகிறேன். அத்துடன், என்னுடைய இந்த வெற்றிப் பாதைக்கு பங்காளிகளாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன்” என்று சந்திமல் மேலும் தெரிவித்தார்.   

தினேஷ் சந்திமல் மட்டும் சுனாமியால் பாதிக்கப்படவில்லை. அம்பலங்கொடையை சேர்ந்த உபுல் தரங்க குறித்த பேரிடரினால் அவருக்கு சொந்தமானவற்றை இழந்திருந்த அதேநேரம், இலங்கை அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூரியவின் தாயும் காயமடைந்திருந்தார்.