இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தசைப்பிடிப்பு உபாதை காரணமாக நியூசிலாந்து வீரர்களான வேகப் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் மற்றும் சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கிறது. டி20 சர்வதேச தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியிருந்த நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸினால் அபார வெற்றி பெற்றிருந்தது.
டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்ட ஷிகார் தவான்
இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள………..
கடந்த வியாழக்கிழமை (21) நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது பந்துவீச்சில் ஈடுபட்ட ட்ரெண்ட் போல்ட் உபாதைக்குள்ளானார். பின்னர் தொடர்ந்தும் அவர் பந்துவீசியிருந்தார். இந்நிலையில், நேற்று (27) நடைபெற்ற MRI பரிசோதனையின் போது ட்ரெண்ட் போல்ட்டிற்கு வலது விலா எலும்பு தசைப்பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து நாளை (29) நடைபெறவுள்ள போட்டியில் ட்ரெண்ட் போல்ட்டினால் பங்கேற்க முடியாது என நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதேவேளை முதல் டெஸ்ட் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிந்த சகலதுறை வீரர் கொலின் டி க்ரெண்ட்ஹோம் உபாதைக்குள்ளாகியிருந்தார்.
இந்நிலையில் க்ரெண்ட்ஹோமுக்கு மேற்கொள்ளப்பட்ட MRI பரிசோதனையின் போது அவருக்கு இடது பக்க வயிற்று தசைப்பகுதியில் உபாதை ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்படுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
டெஸ்ட் துடுப்பாட்ட வரிசையின் முதலிடத்துக்கான மோதலில் ஸ்மித், கோஹ்லி
சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று (26) வெளியிட்டுள்ள ………..
ட்ரெண்ட் போல்ட் மற்றும் கொலின் டி க்ரெண்ட்ஹோம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் சபையானது இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்காக மூன்று வீரர்களை குழாத்தில் இணைத்துள்ளது. டி20 சர்வதேச போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள சகலதுறை வீரரான டெரில் மிட்செல் முதல் முறையாக நியூசிலாந்து டெஸ்ட் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
மேலும், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சுழற் பந்துவீச்சாளரான டொட் அஸ்டில் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார். இதேவேளை, கடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது நியூசிலாந்து அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக விளங்கிய வேகப் பந்துவீச்சாளர் லுக்கி போர்குசனும் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து குழாம்.
கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), டொம் லேதம், ஜீட் ராவல், ரொஸ் டைலர், ஹென்றி நிக்கொலஸ், பி.ஜே வெட்லிங், மிட்செல் சான்ட்னர், டிம் சௌத்தி, நைல் வேக்னர், டொம் ப்ளுன்டெல், மெட் ஹென்றி, லுக்கி போர்குசன், டெரில் மிட்செல், டொட் அஸ்டில்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<