பெட் கம்மின்ஸிற்கு பதிலாக தலைவராகும் ஸ்டீவ் ஸ்மித்

West Indies tour of Australia 2022

279

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் தொடைப்பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதை குணமடையாத காரணத்தால் பெட் கம்மின்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

>> பிளச்சரின் சதத்துடன் கண்டி பல்கொன்ஸ் அபார வெற்றி

டெஸ்ட் அணித்தலைவரான பெட் கம்மின்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஸ்கொட் போலண்ட் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஸ்கொட் போலண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமாகியிருந்ததுடன், 3 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எனினும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களில் சுழல் பந்துவீச்சாளர்களின் தேவை காரணமாக ஸ்கொட் போலண்ட் அணியில் இணைக்கப்படவில்லை. தற்போது பெட் கம்மின்ஸ் உபாதைக்குள்ளாகியுள்ளதால், மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

>> “தசுன் ஷானகதான் எனக்கு வாய்ப்பை பெற்றுத்தந்தார்” – சரித் அசலங்க!

பெட் கம்மின்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

.>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<