டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் சுப்பர் 8 சுற்றின் மூன்றாம் வாரத்திற்கான முதல் போட்டியில், இறுதி நேரங்களில் காண்பித்த அதிரடி ஆட்டத்தின் காரணமாக, கடற்படை அணியுடனான போட்டியை புளு ஸ்டார் அணி 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் முடித்தது.
களனிய கால்பந்து மைதானத்தில் ஆரம்பித்த இப்போட்டியின் முதல் சில நிமிடங்களுக்கு கடற்படை அணியினருக்கு ஒரு கோணர் உதை மற்றும், இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் முதல் இரு சந்தர்ப்பங்களிம் அவர்களது இலக்கு சரியாக இருக்கவில்லை. மூன்றாவது சந்தர்ப்பத்தில் கடற்படை தரப்பின் உதை கோல் கம்பங்களை நோக்கி சென்றாலும் புளு ஸ்டார் கோல் காப்பாளர் மஞ்சுல அதனை பிடித்தார்.
எதிர்பார்ப்புகளுக்கு மாற்றமாக முடிவடைந்த புளு ஸ்டார், விமானப்படை இடையிலான போட்டி
அதன் பின்னர் இரு தரப்பும் சரி சமமாக ஆடின. புளு ஸ்டார் வீரர்கள் கோல் பெறுவதற்காக எதிர் தரப்பின் கோல் எல்லையை ஆக்கிரமித்தபோதும், அவ்வணியின் முன்கள வீரர்களது இறுதி செயற்பாடுகள் அவ்வணிக்கு சாதகமாக இருக்கவில்லை.
ஆட்டத்தின் 19 நிமிடங்கள் கடந்த நிலையில் ஜிபோலா வழங்கிய பந்தை ஷன்ன கோல்களுக்குள் செலுத்துவதற்கு முயற்சிக்கையில், அதனை தரிந்து எரங்க கோல்களுக்கு மிக அண்மையில் இருந்து சிறந்த முறையில் திசை திருப்பி உதைந்தார்.
இவ்வாறான ஒரு நிலையில் போட்டியின் 27ஆவது நிமிடத்தில் தரிந்து எரங்க நீண்ட தூரத்திற்கு உதைந்து வழங்கிய பந்தை சுபாஷ் மதுஷான் தலையால் முட்டி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
அதன் பின்னர் புளு ஸ்டார் அணியின் பின்கள மற்றும் மத்திய கள வீரர்கள் சிறந்த முறையில் பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு கோல்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தினாலும், இறுதி நேரத்தில் அவை வெற்றியளிக்கவில்லை.
முதல் பாதியின் மேலதிக நேரத்தில் கிடைத்த கோணர் உதையின்போது வந்த பந்தை சுபாஷ் மதுஷான வேகமாக கோல்களுக்குள் உதைந்தார். எனினும் அந்தப் பந்து மற்றொரு வீரரின் காலில் பட்டு திசை திரும்பியது.
அதே நிமிடத்தில் புளு ஸ்டார் அணியிக்கு கிடைத்த கோணர் உதை வாய்ப்பின்போது, கோல் கம்பங்களுக்குள் வந்த பந்தை கோல் காப்பாளர் உதயங்க ரெஜினோல்ட் சிறந்த முறையில் தட்டி கோலைத் தடுத்தார்.
முதல் பாதி: புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 00 – 01 கடற்படை விளையாட்டுக் கழகம்
இரண்டாவது பாதி ஆரம்பமாகியதும் புளு ஸ்டார் அணி வீரர்கள் போட்டியை சமப்படுத்துவதற்கான கோலைப் பெறும் முயற்சியுடன் மிகவும் வேகமாக விளையாடினர்.
எனினும் 50ஆவது நிமிடத்தில் புளு ஸ்டார் அணியின் பின்கள வீரர்கள் மற்றும் கோல் காப்பாளர் மஞ்சுல பெர்னாண்டோவுக்கு இடையிலான தடுமாற்றத்தின் காரணமாக கடற்படை அணி தமது இரண்டாவது கோலைப் பெற்றது. அந்த கோலை கிறிஷான்த பெரேரா பெற்றுக்கொடுத்தார்.
அதே சூட்டுடம் விளையாடிய கடற்படை அணி அடுத்த நிமிடங்களிலும் மூன்றாவது தமது கோலுக்கான சில சிறந்த முயற்சிகளையும் மேற்கொண்டது.
இஸ்ஸதீனின் இரு கோல்களின் உதவியுடன் வெற்றி பெற்ற ராணுவப்படை
போட்டியின் 65 நிமிடங்கள் கடந்த நிலையில் புளு ஸ்டார் அணிக்கு கிடைத்த கோணர் உதையின் போது அவ்வணிக்கான முதல் கோல் வாய்ப்பு காத்திருந்தது. அதன்போது, ரிப்கான் ஹெடர் மூலம் சிறந்த முறையில் தனது அணிக்கு கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து 68ஆவது நிமிடத்தில் கடற்படை அணி வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாறல்களுடன் வந்து இறுதியாக கோலை நோக்கி உதைய, அதனை மஞ்சுல பெர்னாண்டோ சிறப்பாகத் தடுத்தார்.
அதன் பின்னர் போட்டி மிகவும் விறுவிறுப்படைந்தது. இரு அணிகளினதும் ரசிகர்களின் கோஷங்களுக்கு மத்தியில் வீரர்கள் முட்டியும், தள்ளியும் விளையாடும் ஒரு நிலை ஏற்பட்டது.
போட்டியின் 77ஆவது நிமிடத்தில் உயர்ந்த வந்த பந்தை ஷன்ன, சக வீரர் ஜிபோலாவுக்கு வழங்க அதனைப் பெற்று எடுத்துச் சென்ற அவர், ஒரு பக்க கம்பத்திற்கு வெளியே இருந்து உதைய, அந்தப் பந்தைப் பிடிக்க கோல் காப்பாளர் ரெஜினோல் முயற்சித்தார். எனினும் பந்து கோலுக்குள் செல்ல, போட்டி தலா இரண்டு கோல்களுடன் சமநிலையானது.
அதனைத் தொடர்ந்தும் 85ஆவது நிமிடம் கடந்த நிலையில் புளு ஸ்டாரின் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ப்ரீ கிக் உதையை ஷன்ன தலையால் அடிக்க, அது கோலின் மேல் கம்பத்தை அண்மித்த வகையில் வெளியே சென்றது.
போட்டியில் 90 நிமிடங்கள் கடந்த நிலையில், மேலதிகமாக வழங்கப்பட்ட நான்கு நிமிடங்கள் இரு அணியின் வேகத்தையும் மேலும் அதிகரித்தது. எனவே, இறுதி விசில் வரை போராடியும் எந்த தரப்பினராலும், முன்னிலையடைவதற்கான கோலைப் பெற முடியாமல் போனது.
முழு நேரம்: புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 02 – 02 கடற்படை விளையாட்டுக் கழகம்
Thepapare.com இன் போட்டியின் நாயகன் – அபொன்ஜா ஜிபோலா (புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்)
கோல் பெற்றவர்கள்
கடற்படை விளையாட்டுக் கழகம் – சுபாஷ் மதுஷான் 27’, கிறிஷான்த பெரேரா 50’
புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – bமஞ்சள் அட்டைகள்
கடற்படை விளையாட்டுக் கழகம் – கிறிஷான்த பெரேரா 75’ உதயங்க ரெஜினோல்ட் 76’
புளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் – நசீரு உபேமி 68’