மேல் மாகாண சம்பியன்களான வித்யாரத்ன, லும்பினி மற்றும் டி மெசெனொட் கல்லூரிகள்

223

மேல்மாகாணப் பாடசாலைகள் இடையில் 12 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பு றோயல் கல்லூரியின் விளையாட்டு அரங்கில் நடைபெற்று முடிந்திருக்கும் ப்ளூ என்ட் கோல்ட் அழைப்பு கரப்பந்தாட்ட தொடரின் ஆண்கள் பிரிவில் சம்பியன்களாக வித்யாரத்ன பல்கலைக்கழக கல்லூரியும் (20 வயதுக்குட்பட்ட), டி மசெனொட் கல்லூரியும் (18 வயதுக்குட்பட்ட) பத்மாவதிய மத்திய கல்லூரியும் (16 வயதுக்குட்பட்ட), குருவமுல்ல மகா வித்தியாலயமும் (14 வயதுக்குட்பட்ட) முடிசூடியுள்ள இதேவேளை, பெண்கள் பிரிவு சம்பியனாக லும்பினி கல்லூரி (20 வயதுக்குட்பட்ட) மாறியிருக்கின்றது.

மேல் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டத் தொடர் இவ்வார இறுதியில்

12 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேல் மாகாண …

இத்தொடரினை நடாத்திய றோயல் கல்லூரியானது ஆண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 18 மற்றும் 16 வயதுகளுக்குட்பட்ட பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளது.

றோயல் கல்லூரி கரப்பந்தாட்ட ஒன்றியத்தின் ஆலோசனை மற்றும் முகாமைத்துவப் பிரிவும், றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் (Royal College Union Volleyball Advisory and Management Committee – RCUVAMC) 12 ஆவது முறையாக ப்ளூ என்ட் கோல்ட் அழைப்பு கரப்பந்தாட்ட தொடரினை ஏற்பாடு செய்திருந்தது. இத் தொடரின் போட்டிகள் யாவும் றோயல் கல்லூரியின் விளையாட்டு அரங்கில் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்த.

இதன்படி இம்முறை போட்டித் தொடரில் ஆண்களுக்காக 14, 16, 18 மற்றும் 20 ஆகிய நான்கு வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றதுடன், மகளிர் பிரிவில் 20 வயதுக்குட்பட்ட போட்டிகள் மாத்திரம் நடைபெற்றிருந்த.  

20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

ஹொரனையினைச் சேர்ந்த வித்யாரத்ன பல்கலைக்கழக கல்லூரியானது 20 வயதுக்குட்பட்ட பிரிவின் இறுதிப் போட்டியில் மூன்று சுற்றுக்களிலும் வெற்றி பெற்று நடப்பு சம்பியன்களான கொழும்பு றோயல் கல்லூரியினை வீழ்த்தியது.  

போட்டியின் முதல் சுற்றினை வித்யாரத்ன கல்லூரி வீரர்கள் தமது மேம்படுத்தப்பட்ட திறமையினால் 25-18 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினர்.  

Photos: 12th Blue Gold & Blue Volleyball Championship 2018 | Day 2

ThePapare.com | Waruna Lakmal | 11/06/2018 Editing and re-using images without …

இதற்கு இரண்டாம் சுற்றின் ஆரம்பத்தில், 06-10 என்ற முன்னிலையோடு றோயல் கல்லூரி பதிலடி தந்திருந்த போதிலும், தொடர்ந்த நிமிடங்களில் வித்யாரத்ன கல்லூரி ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாம் சுற்றினையும் 25-20 என தமக்குச் சொந்தமாக்கியது.

மூன்றாம் சுற்றில் ஆரோக்கியமான முன்னிலை ஒன்றுடன் 13-07 என வித்யாரத்ன கல்லூரி முன்னேறிய போதிலும், றோயல் கல்லூரியும் துரித கதியிலான முயற்சிகளை மேற்கொண்டு இந்த சுற்றினை கைப்பற்ற முயற்சி செய்திருந்தது. எனினும், மூன்றாம் சுற்றினையும் 25-21 என வித்யாரத்ன கல்லூரி கைப்பற்றி மூன்று சுற்றுக்களிலும் 3-0 என வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை வென்றது.

20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு  

20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவின் நடப்பு சம்பியன்களாக இருக்கும் லும்பினி கல்லூரி அணி, கடந்த ஆண்டு போன்று இம்முறையும் பாணந்துறை அகமதி மகளிர் கல்லூரியினை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

இறுதிப் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் காட்டிய லும்பினி கல்லூரி இரண்டு சுற்றுகளினையும் 25-18 மற்றும் 25-13 என்கிற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றியே பெண்கள் பிரிவின் சம்பியன்களாகியிருந்தது.  

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

மிகவும் சுவாரசியமாக நடைபெற்றிருந்த 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியின் இரண்டு சுற்றுக்களிலும் 2-0 என கந்தானை டி மசெனொட் கல்லூரி றோயல் கல்லூரி வீரர்களை தோற்கடித்து சம்பியன் பட்டத்தினை வென்றிருந்தது. இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 26-24 என்ற புள்ளிகள் கணக்கிலும், இரண்டாம் சுற்றில் 25-23 என்ற புள்ளிகள் கணக்கிலும் றோயல் கல்லூரியினை, மசெனொட் கல்லூரி வீழ்த்தியிருந்தது.

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் றோயல் கல்லூரியுடன் மோதியிருந்த பத்மாவதிய மத்திய கல்லூரியானது இரண்டு சுற்றுக்களையும் 25-14 மற்றும் 25-16 என்கிற புள்ளிகள் கணக்கில் மிகவும் இலகுவாகக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தினை வென்றிருந்தது.

Photos: 12th Blue Gold & Blue Volleyball Championship

ThePapare.com | Brian Dharmasena | 10/06/2018 Editing and re-using images without …

14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த குருவமுல்ல மகா வித்தியாலயம், கொழும்பு D.S. சேனநாயக்க கல்லூரியினை வீழ்த்தியதன் மூலம் 14 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு சம்பியன்களாக மாறியிருந்தனர்.

இந்த இறுதிப் போட்டியின் முதல் சுற்றில் 25-16 என்கிற புள்ளிகள் அடிப்படையிலும், இரண்டாம் சுற்றில் 25-20 என்கிற புள்ளிகள் அடிப்படையிலும் குருவமுல்ல மகா வித்தியாலயம் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விருதுகள்

20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

சிறந்த ஒழுங்கமைப்பவர் (Best Setter) – W.D.N. சமரதுங்க (வித்யாரத்ன பல்கலைக்கழக கல்லூரி)

சிறந்த தாக்குதல் வீரர் (Best Attacker) – சுரேஷ் சானக்க அனுருத்த (றோயல் கல்லூரி)

சிறந்த தடுப்பு வீரர் (Best Defender) – L.M.P.L. ஜயலத் (வித்யாரத்ன பல்கலைக்கழக கல்லூரி)

சிறந்த வீரர் (Best Player) – M.M.A.R. பராக்கிரம (வித்யாரத்ன பல்கலைக்கழக கல்லூரி)

20 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு

சிறந்த ஒழுங்கமைப்பவர் (Best Setter) – சயூரி ஹிமாயா (லும்பினி மஹா வித்தியாலயம்)

சிறந்த தாக்குதல் வீராங்கனை (Best Attacker) – வாசனா மெண்டிஸ் (அகமதி பாலிகா வித்தியாலயம், பாணந்துறை)

சிறந்த தடுப்பு வீராங்கனை (Best Defender) – உத்பால நெத்மினி (லும்பினி மஹா வித்தியாலயம்)

சிறந்த வீராங்கனை (Best Player) – ப்ரபோதா ஹன்ஸி (லும்பினி மஹா வித்தியாலயம்)

ஆசிய கனிஷ்ட பெண்கள் கரப்பந்தாட்டத் தொடரில் சாதிக்குமா இலங்கை?

வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெறவுள்ள 16 நாடுகளுக்கு இடையிலான …

18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

சிறந்த ஒழுங்கமைப்பவர் (Setter) – A.D. பவான் ஹிருனிக்க (டி மசெனொட் கல்லூரி)

சிறந்த தாக்குதல் வீரர் – R.M.V.S.B. பண்டார (டி மசெனொட் கல்லூரி)

சிறந்த தடுப்பு வீரர் – H. யோஹான் பசிந்து (டி மசெனொட் கல்லூரி)

சிறந்த வீரர் – M.K. மிலிந்த இஷான் (டி மசெனொட் கல்லூரி)

16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

சிறந்த ஒழுங்கமைப்பவர் (Setter) – கயஷான் மலீஷ (பத்மாவதிய மத்திய கல்லூரி)

சிறந்த தாக்குதல் வீரர் – A.M.K.S. அபேயகோன் (றோயல் கல்லூரி)

சிறந்த தடுப்பு வீரர் – கவிஷ்க விதுரங்க (பத்மாவதிய மத்திய கல்லூரி)

சிறந்த வீரர் – அவிஷ்க மதுசங்க (பத்மாவதிய மத்திய கல்லூரி)

14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு

சிறந்த ஒழுங்கமைப்பவர் (Setter) – ரவிந்து லக்ஷான் (குருவமுல்ல மகா வித்தியாலயம்)

சிறந்த தாக்குதல் வீரர் – துலன்க்க சஞ்சய (D.S. சேனநாயக்க கல்லூரி)

சிறந்த தடுப்பு வீரர் – திலிந்து நிஷகய (குருவமுல்ல மகா வித்தியாலயம்)

சிறந்த வீரர் – மலித்த ஷெஹான் (குருவமுல்ல மகா வித்தியாலயம்)

மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க…