டி-20 தொடரை இழந்த இலங்கை கட்புலனற்றோர் அணி

178

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் 20 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை கட்புலனற்றோர் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என இழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கட்புலனற்றோர் அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய அனைத்து துறைகளிலும் சோபித்தபோதும் பலம் மிக்க இந்திய அணிக்கு சவால் கொடுப்பதில் நெருக்கடி கண்டு வருகிறது.

இந்நிலையில் போபாலில் இன்று (17) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடக் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வரிசைக்கு நெருக்கடி கொடுக்க இலங்கை பந்துவீச்சாளர்களால் முடிந்தது.

குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக இலங்கை அணியில் குசல் மெண்டிஸ்

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா, தொடையில் ஏற்பட்ட உபாதை ஒன்றின்…

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் சதம் பெற்ற தீபக் மாலிக்கின் விக்கெட்டை 10 ஓட்டங்களுக்கு வீழ்த்திய இலங்கை அணி அடுத்து வந்த வீரர்களை மட்டுப்பத்தினர். எனினும் மத்திய வரிசையில் வந்த அணித்தலைவர் அஜே குமார் 45 பந்துகளில் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினார்.

இதன் மூலம் இந்திய கட்புலனற்றோர் அணி 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை கட்புலனற்றோர் அணி முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 29 ஓட்டங்களுக்கு பறிகொடுத்ததோடு அடுத்து வந்த வீரர்களும் நின்றுபிடித்து ஆடத்தவறினர்.

மத்திய வரிசையில் வந்த கே. சில்வா மாத்திரம் வெற்றிக்காக கடைசி வரை போராடினார். அவர் 23 பந்துகளில் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களையே பெற்றது. துடுப்பாட்டத்தில் சோபித்த அஜே குமார் பந்துவீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

போட்டியின் சுருக்கம்    

இந்தியா – 209/5 (20) – அஜே குமார் 83*, ஆர். வெங்கடேஸ்வரா 35, டி. ராவோ 34*, டி. ரவிந்திர 1/13

இலங்கை – 189/8 (20) – கே. சில்வா 50*, சி. தேசப்ரிய 35, அஜே குமார் 2/23, டி. ராவோ 1/7

முடிவு – இந்தியா 20 ஓட்டங்களால் வெற்றி

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<