பங்களாதேஷ் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்த அசித பெர்னாண்டோ

205
Big blow for Sri Lanka ahead of Bangladesh ODIs & Tests

தேசிய சுபர் லீக் தொடரில் ஆடி வருகின்ற வேகப்பந்துவீச்சாளரான அசித பெர்னாண்டோ தசை உபாதை ஒன்றுக்கு முகம் கொடுத்திருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

>>LPL தொடரில் காலி அணிக்கு புது உரிமையாளர்கள்<<

இலங்கை அணிக்காக அண்மையில் நடைபெற்றிருந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்த அசித பெர்னாண்டோ தற்போது உபாதைக்குள்ளாகியிருப்பதன் காரணமாக இலங்கை அணி பங்களாதேஷ் உடன் விளையாடவிருக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஆடுவதில் சந்தேகம் நிலவுகின்றது.

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியானது அங்கே மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுகின்றது. இதில் தற்போது T20I தொடர் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக எதிர்வரும் 13ஆம் திகதி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகவிருக்கின்றது. இந்த ஒருநாள் தொடரின் பின்னர் டெஸ்ட் தொடர் மார்ச் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது.

அதேவேளை அசித பெர்னாண்டோ ஆடாத நிலையில் லஹிரு குமார அவரின் இடத்தினை இலங்கை குழாத்தில் பிரதியீடு செய்ய முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<