இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளரான என்ட்ரிஜ் நோர்கியே விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
>>இந்திய கிரிக்கெட்டுக்கு அறிவுரை வழங்கும் வசீம் அக்ரம்
தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடவிருக்கின்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக ஐ.சி.சி. இன் டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்கான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் பெயரிடப்பட்டிருந்த என்ட்ரிஜ் நோர்கியே காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியிருக்கின்றார்.
நோர்கியே வெளியாகியிருக்கும் விடயத்தினை தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை (CSA) தம்முடைய ட்விட்டர் கணக்கின் மூலமாக உறுதி செய்திருக்கின்றது.
>>ஸ்கொட் போலான்டினை டெஸ்ட் குழாத்தில் இணைத்துள்ள அவுஸ்திரேலியா
என்ட்ரிஜ் நோர்கியேவிற்குப் பதிலாக வீரர்கள் எவரினையும் உள்வாங்கவில்லை என்றும் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை குறிப்பிட்டிருக்கின்றது.
#Proteas Squad update 🚨
Anrich Nortje has been ruled out of the 3-match #BetwayTestSeries due to a persistent injury 🚑
No replacement will be brought in#SAvIND #FreedomSeries #BePartOfIt pic.twitter.com/5R8gnwdcpF
— Cricket South Africa (@OfficialCSA) December 21, 2021
அதேவேளை இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் 26ஆம் திகதி செஞ்சூரியன் நகரில் ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<