IPL அறிமுகத்தில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பானுக!

Indian Premier League 2022

699
hanuka shines in IPL Debut as Punjab Kings

மும்பையின் டி.வை. பட்டில் மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) றோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

ஆட்டத்தில் பெப் டு பிளெசிஸின் அபாரமான துடுப்பாட்ட இன்னிங்ஸ் (88) மற்றும் தினேஷ் கார்த்திக்கின் (32) பினிஸிங் போன்றவற்றின் மூலமாக றோயல் செலஞ்சர்ஸ் அணி 206 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த போதும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் அறிமுகமான பானுக ராஜபக்ஷ, சிக்கர் தவான், ஓடியன் ஸ்மித் மற்றும் சாருக் கான் ஆகியோரின் அதிரடியான ஆட்டங்களின் உதவியுடன் ஒரு ஓவர் மீதமிருக்க வெற்றியை பதிவுசெய்தது.

முதல் விக்கெட்டுக்காக பஞ்சாப் அணி 71 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. எனினும், வனிந்து ஹஸரங்க தன்னுடைய முதலாவது பந்தில் பஞ்சாப் அணியின் தலைவர் மயங்க் அகர்வாலின் விக்கெட்டினை கைப்பற்றினார்.

இருந்த போதும் பானுக ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்கவின் ஓவரில் சிக்ஸர் மற்றும் பௌண்டரியை விளாசி மீண்டும் அணியை போட்டிக்குள் அழைத்துவர, தவான் (43 ஓட்டங்கள்) சிறப்பாக ஆடி ஆட்டமிழந்தார்.

எவ்வாறாயினும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய பானுக ராஜபக்ஷ 15 பந்துகளில் 35 ஓட்டங்களை விளாசியதுடன், 22 பந்துகளில் 43 ஓட்டங்களை விளாசி சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும், பஞ்சாப் அணியின் வெற்றிக்கான வழியை பானுக ராஜபக்ஷ இலகுவாக்கி ஆட்டமிழந்திருந்தார்.

இறுதியாக ஓடியன் ஸ்மித் 8 பந்துகளில் 25 ஓட்டங்களையும், சாருக் கான் 20 பந்துகளில் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க 19 ஓவர்கள் நிறைவில் பஞ்சாப் அணி வெற்றியை தமதாக்கிக்கொண்டது. இதேவேளை, இந்த போட்டியின் பெறுமதிமிக்க வீரருக்கான விருதினை பானுக ராஜபக்ஷ பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<