இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடருக்கான நியூசிலாந்து குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிச்சல் சேன்ட்னரின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து அணியில் இளம் துடுப்பாட்ட வீரர் பெவன் ஜேக்கப்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
>>இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் ஜோ ரூட்<<
IPL ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட பெவன் ஜேக்கப்ஸ் முதன்முறையாக, நியூசிலாந்து தேசிய அணியில் இடத்தினை பிடித்துள்ளார். பெவன் ஜேக்கப்ஸ் இலங்கை அணிக்கு எதிராக இன்று (23) நடைபெற்றுமுடிந்த பயிற்சிப்போட்டியில் 16 பந்துகளுக்கு 39 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
அதேநேரம் இலங்கை அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற தொடரில் விளையாடாமல் இருந்த ரச்சின் ரவீந்ரா, டெரைல் மிச்சல் மற்றும் மெட் ஹென்ரி ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர்த்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ஏனைய வீரர்களுக்கு நியூசிலாந்து குழாத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளதுடன், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய வில்லியம் ஓ ரர்க் மற்றும் டொம் லேத்தம் போன்ற வீரர்கள் ஒருநாள் தொடருக்கான குழாத்தில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நியூசிலாந்து குழாம்
மிச்சல் சேன்ட்னர் (தலைவர்), மைக்கல் பிரேஸ்வல், மார்க் செப்மன், ஜேக்கப் டப்பி, ஷெக் போல்க்ஸ் (T20I), மிட்சல் ஹே, மெட் ஹென்ரி, பெவன் ஜேக்கப்ஸ் (T20I), டொம் லேத்தம் (ஒருநாள்), கிளேன் பிலிப்ஸ், டெரைல் மிச்சல், வில்லியம் ஓ ரர்க் (ஒருநாள்), ரச்சின் ரவீந்ரா, டிம் ரொபின்சன் (T20I), வில் யங் (ஒருநாள்)
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<