தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் முதன்முறையாக பியூரன் ஹென்ரிக்ஸ் இடம்பெற்றுள்ளதுடன், என்ரிச் நோட்ஜே மற்றும் ரஸ்ஸி வென் டெர் டஸன் ஆகியோருக்கு ஒப்பந்த உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அப்துர் ரசாக்கிற்கு அழைப்பு விடுத்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு உறுப்பினராக செயற்பட வேண்டும் என…
புதிதாக 2020 – 2021ம் ஆண்டு பருவகாலத்துக்கான தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் இம்முறை 16 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தற்காலிக பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெக்கஸ் போல் கருத்து வெளியிட்டார்.
“நாம் இம்முறை 16 வீரர்களுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளோம். ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள வீரர்களை அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இணைத்துக்கொள்ள முடியும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மட்டுப்படுத்த ஓவர்கள் கொண்ட போட்டிகளிலும் பிரகாசிக்க கூடியவர்களாக உள்ளனர்.
அதேநேரம், நாம் ஒப்பந்தத்தில் 17வது வீரரை இணைத்துக்கொள்வதற்கு தயாராகவுள்ளோம். எனினும், எதிர்வரும் போட்டிகளில் பிரகாசிக்கும் வீரர் ஒருவர் இந்த இடத்தை பிடித்துக்கொள்ள முடியும்” என்றார்.
“அதுமாத்திரமின்றி வீரர்களுக்கான ஒப்பந்த உயர்வானது எப்போதும் போன்று, இந்த பருவகாலத்தில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும். இந்தநிலையில், ஒப்பந்தத்தில் இல்லாமல் சர்வதேசத்தில் பிரகாசிக்கும் வீரர்களுக்கு, புதிதாக அடுத்த வருடம் ஒப்பந்தம் வழங்கப்படும்” எனவும் இவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனாவிற்கு எதிராக போராட இலங்கை கிரிக்கெட் சபை நிதி உதவி
இலங்கையின் மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோனா…
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையானது இந்த ஆண்டு நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு புதிய ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. அதேநேரம், சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான T20I தொடர்களையும் கவனத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தென்னாபிரிக்க அணியின் சுற்றுப் பயணங்களான இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்களையும் இந்த ஒப்பந்தத்தில் கவனத்தில் கொண்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒப்பந்தம் பெற்றுள்ள தென்னாபிரிக்க வீரர்கள்
தெம்பா பௌவுமா, குயிண்டன் டி கொக், பெப் டு ப்ளெசிஸ், டீன் எல்கர், ப்யூரன் ஹென்ரிக்ஸ், ரீஷா ஹென்ரிக்ஸ், கேஷவ் மஹாராஜ், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, என்ரிச் நோட்ஜே, எண்டைல் பெஹ்லுக்வாயோ, டுவைன் ப்ரிட்டோரியர்ஸ், காகிஸோ ரபாடா, டெப்ரைஷ் ஷம்ஷி, ரஸ்ஸி வென் டெர் டஸன்
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<