உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் சிறந்த வீரருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார்.
இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் சார்பில் வருடந்தோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
பிக்பேஷ் T-20 லீக்கில் அறிமுகமாகிறார் டி வில்லியர்ஸ்
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் …….
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 85 ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன், அண்மையில் நிறைவுக்குவந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 3ஆவது டெஸ்டில் 135 ஓட்டங்களை எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதனால் தொழில்சார் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் இந்த வருடத்துக்கான சிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
குறித்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட வாக்களிப்பில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டதன் அடிப்படையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், நேற்று (03) லண்டனில் நடைபெற்ற தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (PCA) 50 ஆவது விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய பென் ஸ்டோக்ஸ், “இந்த விருதுகள் அனைத்தையும் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு காலம் வரும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது மிக விரைவில், அதுவும் நான் ஓய்வு பெறுவதற்கு முன் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.
சங்கக்காரவும், ஹேரத்தும் என்னை ஈர்த்த வீரர்கள் – தென்னாபிரிக்க வீரர் செனுரன் முத்துசாமி
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர……..
உண்மையில் இது சிறந்ததொரு கோடைகாலமாக எனக்கு அமைந்தது. அதில் உலகக் கிண்ணத்தை வென்றது ஒரு பகுதியாக இருப்பது ஒரு ஆச்சரியமான உணர்வாக உள்ளது. அத்துடன், ஏழு வாரங்கள் கடின உழைப்பு பின்னர் உலகக் கிண்ணத்தை வென்ற கையோடு ஆஷஸ் தொடரிலும் பிரகாசிக்க முடிந்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்.
இதேநேரம், வருடத்தின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக கிறிஸ் வோக்ஸும், வருடத்தின் சிறந்த டெஸ்ட் வீரராக ஸ்டுவர்ட் ப்ரோட்டும் தெரிவாகியதுடன், பிராந்திய கழகங்களின் சிறந்த வீரராக எசெக்ஸ் கழகத்தின் சிமொன் ஹார்மரும், வளர்ந்துவரும் வீரராக சமர்செட் கழகத்தின் டொம் பென்டனும் தெரிவாகினர்.
இதேவேளை, வருடத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் சொபி எக்லெஸ்டோன் தெரிவு செய்யப்பட்டார்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<