இந்தியாவில் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடர் நடாத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் கோரிக்கை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஆப்கான் அணிக்கு இந்தியாவில் மூன்றாவது சொந்த மைதானம் வழங்கப்பட்டுள்ளது.
நவீன கிரிக்கெட் உலகில் டி20 போட்டிகளுக்கு தனியான ரசிகர்கள் கூட்டம் காணப்படுகின்றது. அதிலும் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் சபைகளினாலும் நடாத்தப்படும் டி20 லீக் போட்டித்தொடர்களுக்கு விசேட முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.
சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்தும் நோக்கில் இலங்கை!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுடைய 6வது லீக் போட்டியில் இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத்தில்
ஆப்கானிஸ்தான் நாடானது கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் விளையாடி வருகிறது. நாட்டில் இடம்பெறுகின்ற யுத்தங்களுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அணியாக விளையாடுகிறது என்பது எல்லோரும் மதிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
ஒவ்வொரு நாடுகளும் டி20 ப்ரீமியர் லீக் தொடர்களை நடாத்தி வருகிறது என்றால் எங்களாலும் முடியும் என்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த வருடம் நிரூபித்து காட்டியது. ஆனால் தங்களுடைய நாட்டில் நடாத்த முடியாது என்ற கவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மத்தியில் காணப்படுகின்றது.
கடந்த வருடம் (2018) முதல் முறையாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஐந்து அணிகளின் பங்குபற்றுதலுடன் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் டி20 லீக் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜாவில் நடைபெற்றிருந்தது.
இந்த லீக் தொடரில் உலகளவில் பிரசித்தி பெற்ற குறிப்பிடக்கூடிய கிரிக்கெட் வீரர்களாக கிறிஸ் கெய்ல், ஷஹீட் அப்ரிடி, பிரென்டன் மெக்கலம் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். மேலும் கடந்த வருடம் நடைபெற்ற ஏ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக 18 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இலங்கை அணியின் சகலதுறை வீரர் இசுரு உதான திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு இந்தியா பாரியளவிலான உதவிகளை செய்து வருகிறது. தங்களுடைய நாட்டில் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற காரணத்திற்காக இந்திய கிரிக்கெட் சபை இந்தியாவிலேயே ஆப்கானிஸ்தான் அணிக்கு இரண்டு மைதானங்களை தங்களது சொந்த மைதானமாக பயன்படுத்த அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் சில வேண்டுகோள்களை விடுத்திருந்தது. இதில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் லீக் தொடரான ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரை இந்தியாவில் நடாத்த அனுமதி வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கோரிக்கையினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது நிராகரித்துள்ளது.
மாலிங்க இருமுறை நாடு திரும்பியமை இலங்கை அணியை பாதிக்குமா?
இங்கிலாந்து சென்று உலகக் கிண்ணத் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, தங்களுடைய அரையிறுதி
இந்தியாவிலும் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) என்ற பெயரில் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகின்ற காரணத்தினால் மற்றுமொரு ப்ரீமியர் லீக் தொடரை இங்கு நடாத்துவது சிறந்தது அல்ல என்ற காரணத்தினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை விடுத்த மற்றுமொரு வேண்டுகோளானது, தங்களுக்கு இந்தியாவில் இரண்டு மைதானங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்னுமொரு மைதானத்தினை வழங்குங்கள் என கோரிக்கை விடுத்திருந்தது. குறித்த கோரிக்கை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே காணப்படும் டேராடூன் மற்றும் கிரேடர் நொய்டா ஆகிய மைதானங்களுக்கு மேலதிகமாக ஆப்கான் அணியின் மூன்றாவது சொந்த மைதானமாக தற்போது லக்னோவில் அமைந்துள்ள மைதானம் வழங்கப்படவுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு அனுபவம் தேவை என்ற வேண்டுகோளுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது. பத்து பயிற்றுவிப்பாளர்களுக்கு இந்தியாவில் நடைபெறும் சிறப்பு முதல்தர தொடரான ரஞ்சி தொடரில் இணைந்து பயிற்றுவிப்பாளர்களாக பயிற்சி பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க