இந்தியாவிலிருந்து UAE இற்று மாறுகிறதா T20 உலகக் கிண்ணம்?

ICC MEN’S T20 WORLD CUP 2021

260
ICC

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் இவ்வருடம் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (BCCI) தரப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணப் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, இந்தியாவில் ஒக்டோபர்நவம்பர் மாதங்களில் 2021 T20 உலகக் கிண்ணம் நடைபெறும் என ஐசிசி அறிவித்தது. இதனால் 2022 T20 உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது

2021 T20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் அப்போட்டி நடைபெறும் என BCCI தரப்பு தெரிவித்துள்ளது.  

T20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

இந்த நிலையில், BCCI இற்கு அளித்த பேட்டியில் அதன் மூத்த அதிகாரியான திரஜ் மல்ஹோத்ரா கூறியதாவது:

”T20 உலகக் கிண்ணப் போட்டியின் இயக்குநர்களில் ஒருவராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே, போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த எல்லாவிதமான முயற்சிகளையும் நான் மேற்கொள்வேன்

ஒருவேளை, நிலைமை தொடர்ந்து நீடித்தால் T20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும். அங்கு நடந்தாலும் போட்டியை BCCI தான் நடத்தும்” என தெரிவித்தார்

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் இம்முறை T20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள மைதானங்களாக மும்பை, டெல்லி, சென்னை உள்ளிட்ட 9 இடங்களை BCCI அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 >>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<<