லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் அணி வீரரான ஆவேஸ் கானுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஐ.பி.எல். தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் 15ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வெற்றி பெற்றதனை தொடர்ந்து ஆவேஸ் கான் மைதானத்தில் நடந்து கொண்ட விதத்திற்காகவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகம் கொடுக்கின்றார்.
ஆவேஸ் கான் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் இறுதிப் பந்தில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் த்ரில் வெற்றி பெற்றதனைத் தொடர்ந்து, இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக ஆக்ரோசமான முறையில் தனது தலைக்கவசத்தினை மைதானத்தில் தூக்கி வீசியெறிந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆவேஸ் கான் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளதோடு, அதற்கான தண்டனைகளையும் ஏற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த போட்டியில் மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றச்சாட்டில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் பெப் டு பிளேசிஸிற்கும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பூரான், ஸ்டொய்னிஸ் அதிரடியில் லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ் வெற்றி
அந்தவகையில் பெப் டு பிளேசிஸ் மந்த கதியில் ஓவர்களை வீசிய குற்றத்திற்காக இந்திய நாணயப்படி 12 இலட்ச ரூபாய்களை (இலங்கை நாணயப்படி சுமார் 46 இலட்ச ரூபாய்களை) அபராதமாக செலுத்த கட்டளை இடப்பட்டிருக்கின்றது.
இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<