ICC இன் கோரிக்கையினை மறுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்

ICC Women's World Cup 2024

2
ICC Women's World Cup 2024

இந்த ஆண்டுக்கான (2024) மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரினை இந்தியாவில் நடாத்துவதற்கான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) வேண்டுகோளினை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (ICC) ஏற்க மறுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>>இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக மோர்கல் நியமனம்

2024ஆம் ஆண்டுக்கான மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில் ஒக்டோபர் மாதம் 03 தொடக்கம் 20 வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் பங்களாதேஷில் ஷெய்க் ஹஸீனாவின் ஆட்சி கலைந்த பின்னர் நிலவி வருகின்ற அரசியல் சூழ்நிலை காரணமாக மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரினை அங்கே நடாத்த முடியாத நிலை உருவாகியிருக்கின்றது.

இந்த நிலையில் தொடரினை நடாத்தும் மாற்று நாடுகளாக இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் ESPNcricinfo செய்தி இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில், மகளிர் T20 உலகக் கிண்ண தொடரினை நடாத்த மறுப்புத் தெரிவித்தமைக்கு இந்தியா மழைக்காலம் (Monsoon) மற்றும் அடுத்த ஆண்டுக்கான ஆடவர் T20 உலக கிண்ணத் தொடர் என்பவற்றை காரணம் காட்டுவதாக தெரிவித்துள்ளது.

இந்தியா T20 உலகக் கிண்ணத் தொடரினை நடாத்த மறுக்கும் போது அந்த வாய்ப்பு இலங்கை அல்லது ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு கிடைப்பதற்கான அதிக வாய்ப்புக்கள் தற்போது காணப்படுகின்றன.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<