ஐ.பி.எல். தொடரின் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைப்பு

251
BCCI

நடைபெற்று வந்த இந்த ஆண்டுக்கான (2021), இந்திய ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் காலவரையின்றி பிற்போடப்பட்டிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை (பி.சி.சி.ஐ) அறிவித்திருக்கின்றது. 

கொல்கத்தா – பெங்களூர் மோதல் வேறு திகதியில்

ஐ.பி.எல். தொடரில் பங்கெடுக்கின்ற வீரர்கள் இருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டதனை அடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையில் நேற்று (03) நடைபெறவிருந்த போட்டி வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.  

இதன் பின்னர், சென்னை சுபர் கிங்ஸ் அணியின் ஊழியர்கள் மூவருக்கும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இவ்வாறு தொடர்ச்சியாக கொவிட்-19 வைரஸின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையிலையே பி.சி.சி.ஐ. இந்தப் பருவகாலத்திற்கான ஐ.பி.எல். தொடரில் எஞ்சியிருக்கும் போட்டிகள் அனைத்தினையும் காலவரையின்றி பிற்போட்டிருக்கின்றது. 

IPL தொடரில் புதிய மைல்கல்லை கடந்த வில்லியர்ஸ்

அதேநேரம் புதிதாக வெளியாகியிருக்கும் தகவல்களின் அடிப்படையில் சன்ரைஸர்ஸ் அணியின் துடுப்பாட்டவீரரான ரித்திமான் சஹா மற்றும் டெல்லி கெபிடல்ஸ் அணியின் சுழல்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோரும் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

அதேநேரம், ஒத்திவைக்கப்பட்டிருக்கும் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் புதிய திகதிகள் நிலைமைகளை கருத்திற்கொண்டு பி.சி.சி.ஐ. இனால் பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<