இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளருக்கான விண்ணப்பங்கள் இந்திய கிரிக்கெட் கோரியுள்ளது.
அதன்படி தற்போது தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படும் ராஹுல் டிராவிட்டின் இடத்துக்கான விண்ணப்பங்களை இம்மாதம் 27ம் திகதிக்கு (மாலை 06.00 மணி) முன்னர் அனுப்பிவைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணத்திற்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு
ராஹுல் டிராவிட் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ண நிறைவுவரை இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இந்தநிலையில் புதிதாக நியமிக்கப்படும் தலைமை பயிற்றுவிப்பாளர் 3 வருட ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்படவுள்ளார். அதன்படி இவ்வருடம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 2027ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் திகதிவரை புதிய பயிற்றுவிப்பாளருக்கு ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.
அதேநேரம் இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தற்போது செயற்பட்டுவரும் ராஹுல் டிராவிட் மீண்டும் இந்த பதவிக்காக விண்ணப்பிக்க முடியும் என்ற அறிவிப்பையும் இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர், அவரின் ஒத்துழைப்புடன் ஏனைய பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்படுவர் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0,l.i>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<