நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள், T20I மற்றும் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் போன்றவற்றுக்கான இந்திய குழாம்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில் T20I தொடரில் பிரகாசித்திருந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
“BBL தொடரிலிருந்து வெளியேறிவிடுவேன்” – அவுஸ்திரேலியாவுக்கு ரஷீட் எச்சரிக்கை!
ரிஷப் பண்ட் கார் விபத்தில் காயத்துக்குள்ளாகியிருக்கும் நிலையில், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் இணைக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு விக்கெட் காப்பாளர் கே.எஸ். பாரத்தும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதேநேரம், உபாதையிலிருந்து குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜஸ்ப்ரிட் பும்ரா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் இணைக்கப்படவில்லை. எனினும் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா மீண்டும் டெஸ்ட் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளபோதும், அவருடைய உடற்தகுதியை அவதானிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை பங்களாதேஷ் தொடரில் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த அணித்தலைவர் ரோஹித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
அவுஸ்திரேலிய தொடருக்கான இந்திய டெஸ்ட் குழாம்
ரோஹித் சர்மா (தலைவர்), கே.எல். ராஹுல் (உப தலைவர்), சுப்மான் கில், செட்டேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ஷிரேயாஸ் ஐயர், கே.எல். பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, மொஹமட் சிராஜ், மொஹமட் சமி, உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்
நியூசிலாந்து தொடருக்கான இந்திய T20I குழாத்தை பொருத்தவரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதுடன், ஹர்திக் பாண்டியா தலைவராக செயற்படவுள்ளார். எனினும் இவர்கள் இருவரும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளனர்.
பிரித்திவ் ஷோவ் இந்திய அணியின் T20I குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளதுடன், கே.எல். ராஹுல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருநாள் மற்றும் T20I குழாத்திலிருந்து விலகியுள்ளனர். இதன்காரணமாக ஒருநாள் தொடரில் கே.எஸ். பாரத் மற்றும் சபாஷ் அஹ்மட் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய சஞ்சு சம்சன் உபாதை காரணமாக வாய்ப்பை இழந்துள்ளதுடன், ஜித்தேஷ் சர்மா அணியில் இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார். அதுமாத்திரமின்றி இலங்கைக்கு எதிரான T20I தொடரில் விளையாடிய ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டுள்ளதுடன், குல்தீப் யாதவ் ஒருநாள் போட்டிகளுக்கான குழாத்தில் மாத்திரம் இணைக்கப்பட்டுள்ளார். இதேவேளை அர்ஷ்டீப் சிங் ஒருநாள் தொடருக்கான குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இடத்துக்கு சர்துல் தாகூர் அழைக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடருக்கான ஒருநாள் குழாம்
ரோஹித் சர்மா (தலைவர்), சுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோஹ்லி, ஷிரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ். பாரத், ஹர்திக் பாண்டியா, வொசிங்டன் சுந்தர், சபாஷ் அஹ்மட், சர்துல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், மொஹமட் சமி, மொஹமட் சிராஜ், உம்ரான் மலிக்
நியூசிலாந்து தொடருக்கான T20I குழாம்
ஹர்திக் பாண்டியா (தலைவர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ருதுராஜ் கைகவட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராஹுல் திருபாதி, ஜித்தேஷ் சர்மா, வொசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்டீப் சிங், உம்ரான் மலிக், சிவம் மாவி, பிரித்திவி ஷோவ், முகேஷ் சர்மா
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<