இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு ஊக்கத் தொகை

England Tour India 2024

102

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் வீரர்களுக்கான ‘டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 

எனவே, ஐந்து போட்டிகள் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த பின் எஞ்சியுள்ள நான்கு போட்டிகளையும் வென்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சாதனையை 112 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி நிகழ்த்தியுள்ளது. முன்னதாக, 1912ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாஇங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி இதே சாதனையை படைத்திருந்தது. 

இந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கத்தொகையை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எங்கள் விளையாட்டு வீரர்களுக்கானடெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத் திட்டம்ஆரம்பிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இத்திட்டமானது 2022-23ஆம் சீசனில் இருந்து ஆரம்பமாகிறதுஎன தெரிவித்துள்ளார் 

மேலும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ள புகைப்படத்தின் அடிப்படையில், தற்போது ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 இலட்சம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பிசிசிஐயின் புதிய அறிவிப்பின் படி, ஒரு சீசனில் 9 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது என்றால், 50 சதவிகித போட்டிக்கும் குறைவாக விளையாடும் வீரர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படாது. அதாவது 9 டெஸ்ட் போட்டியில் 4 போட்டிக்கோ அல்லது அதற்கு குறைவாக விளையாடினால் ஊக்கத்தொகை அளிக்கப்படாது 

ஒருவேளை ஒரு சீசனில் 50 சதவிகித டெஸ்ட் போட்டிக்கும் அதிகமாக வீரர்கள் விளையாடும் பட்சத்தில், இறுதிப் பதினொருவர் அணியில் சேர்க்கப்படும் ஒவ்வொரு போட்டிக்கும் 30 இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை இறுதிப் பதினொருவர் அணியில் இடம்பெற்றால் மட்டுமே வழங்கப்படும். இறுதிப் பதினொருவரில் இடம்பிடிக்காத வீரர்களுக்கு வழக்கம் போல் 15 இலட்சம் ரூபா மட்டுமே சம்பளமாக வழங்கப்படும் 

மேலும், ஒரு சீசனில் 75 சதவிகித டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடினால் அதாவது 7 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் வீரர்கள் இறுதிப் பதினொருவரில் விளையாடும் பட்சத்தில், அவர்களுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கான சம்பளமாக 45 இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படும். அதேசமயம், இறுதிப் பதினொருவர் அணியில் இடம்பெறாத வீரர்களுக்கு 22.5 இலட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்படும் என்று ஜெய் ஷா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் கிரிக்கெட்டின் மதிப்பை பாதுகாக்கும் நடவடிக்கையாக அதனை ஊக்கப்படுத்த இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் இந்திய வீரர்கள் சிலர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வந்த நிலையில் அவர்கள் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே, இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

அதுமாத்திரமின்றி, எதிர்வரும் நாட்களில் ஐபிஎல் விளையாடாவிட்டாலும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகின்ற இந்திய வீரர்களால் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்திக்கும் சூழல் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணி ஒரு சீசனில் குறைந்தபட்சம் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<