சொந்த மண்ணில் ஆஸி. அணியை எதிர்கொள்ளவுள்ள இந்தியா

330

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டு T20I மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான  போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI)  இன்று (10) அறிவித்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் டோனியின் சாதனையை முறியடித்த ரிஷாப் பண்ட்

புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில்….

இந்திய கிரிக்கெட் அணியானது, அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 T20I, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. T20I தொடர் 1-1 என சமனிலையில் நிறைவடைய, டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி ஆஸி. மண்ணில் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை  மறுதினம் (12) ஆரம்பமாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில், அவுஸ்திரேலிய அணியை எதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் எதிர்கொள்ளவுள்ளது. இதன்படி, பெப்ரவரி 24ம் திகதி பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் T20I போட்டியுடன் ஆரம்பமாகும் இந்த தொடரின், இரண்டாவதும், இறுதியுமான T20I போட்டி 27ம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

T20I போட்டிகளை தொடர்ந்து, இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் மார்ச் 2ம் திகதி ஹைதராபாத்தில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூர் (5), மூன்றாவது போட்டி ரான்ச்சி (8), நான்காவது போட்டி மொஹாலி (10) மற்றும் ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி டெல்லியிலும் என நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாறு படைத்த இந்திய வீரர்களுக்கு பரிசுத்தொகை

அவுஸ்திரேலியாவில், 72 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் இந்தியா….

இவ்வாறு, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள இந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடர், அவர்களது உலகக்கிண்ணத்துக்கு முன்னதான இறுதி தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த தொடரானது மார்ச் 13ம் திகதி நிறைவடையும் நிலையில், மார்ச் 23ம் திகதி .பி.எல். தொடர் (IPL)  ஆரம்பமாகிறது. .பி.எல். தொடர் மே மாத நடுப்பகுதியில் முடிவடைவதுடன், மே 30ம் திகதி கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதனால் இந்த தொடர், இந்திய அணியின் இறுதி இருதரப்பு தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி அட்டவணை

  • 1வது T20I – பெப்ரவரி 24 – பெங்களூர்
  • 2வது T20I – பெப்ரவரி 27 – விசாகப்பட்டினம்
  • 1வது ஒருநாள் போட்டி – மார்ச் 2 – ஹைதராபாத்
  • 2வது ஒருநாள் போட்டி – மார்ச் 5 – நாக்பூர்
  • 3வது ஒருநாள் போட்டி – மார்ச் 8 – ரான்ச்சி
  • 4வது ஒருநாள் போட்டி – மார்ச் 10 – மொஹாலி
  • 5வது ஒருநாள் போட்டி – மார்ச் 13 – டெல்லி

>>கிரிக்கெட் காணொளிகளைப் பார்வையிட<<