அவுஸ்திரேலியாவில், 72 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் இந்தியா டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் விராட் கோஹ்லி அணி பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை, வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, வரலாற்றில் முதல் தடவையாக அதிகளவான பரிசுத்தொகைகளை அனைவருக்கும் அறிவித்துள்ளது.
இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல் முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இந்திய வரலாறு மட்டுமல்ல, ஆசியாவிலேயெ அவுஸ்திரேலிய மண்ணில் முதன் முதலாக டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது.
இதேநேரம், தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு முன்னாள், இன்னாள், சர்வதேச மற்றும் உள்ளூர் வீரர்கள் என பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
வரலாற்று சாதனையுடன் ஆஸி டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கு கிரிகெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மற்றும்..
இந்த நிலையில் சரித்திர வெற்றியை சாத்தியமாக்கிய இந்திய அணி வீர்ர்கள், உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் சபை பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து டெஸ்ட் அணி வீரர்கள் தங்கள் ஓர் ஆட்டத்துக்கான தொகையை பரிசாக பெறுகிறார்கள், அணியில் விளையாடிய 11 வீரர்களுக்கு ஆட்டம் ஒன்றுக்கு ரூ.15 இலட்சமும், டெஸ்ட் அணியில் இடம்பெற்று விளையாடாமல் இருந்த வீரர்களுக்கு ரூ.7.5 இலட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயிற்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 25 இலட்சமும், அணி உதவிப்பணியாளர்கள் (பயிற்சியாளர் அல்லாத) அவர்களது சம்பளத் தொகையை ஊக்கப்பரிசுத் தொகையாகவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை வழங்கவுள்ளது.
ஆஸி. ஒருநாள் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு: சிராஜிற்கு அழைப்பு
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்..
இது இவ்வாறிருக்க, அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரில் சாதனைகள் பலவற்றை நிலைநாட்டி தொடர் நாயகன் விருதை வென்ற புஜாரா மற்றும் இளம் வீரர் ரிஷாப் பண்ட் ஆகியோரது ஒப்பந்தத்தை உயர்த்தவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுககு A, A+, B, C என்ற அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
டெஸ்ட் வீரரான புஜாரா, கிரிக்கெட் சபை ஒப்பந்தத்தில் வருடத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் A தர ஒப்பந்தத்தில் இருக்கிறார். அவரது ஒப்பந்தத்தை ரூ.7 கோடி ஊதியம் வாங்கும் A+ பிரிவுக்கு உயர்த்தவும், ரிஷாப் பண்ட்டுக்கு B பிரிவு ஒப்பந்தத்தை வழங்கவும் இந்திய கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<