கிரிக்கெட் உலகில் வினோதமான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை. அந்தவகையில், வித்தியாசமான சம்பவம் ஒன்று பங்களாதேஷிலும் நடைபெற்றிருக்கின்றது.
சகீப் அல் ஹசன், மஹமதுல்லா, முஷ்பிகுர் ரஹீம் மற்றும் தமிம் இக்பால் ஆகியோர் உள்ளடங்களாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சிலர் அந்நாட்டு முதல்தரக் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருக்கின்றனர்.
வளர்ந்து வருவோருக்கான ஆசியக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு
பங்களாதேஷில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண…
இந்த போராட்டத்தில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் 11 அம்சங்கள் நிறைந்த கோரிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருப்பதுடன், கோரிக்கை நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் ஆடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் இந்த போராட்டத்தினால் அடுத்த மாதம் 03ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பமாகவிருக்கும் இந்திய – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இடம்பெறுவதிலும் சந்தேகம் உருவாகியிருக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகவியாலளர்களிடம் சகீப் அல் ஹசன் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.
”இந்த போராட்டத்தில் நாம் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி வீரர்களை மாத்திரம் அவர்கள் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக தயாராகுவதால் இணைக்கவில்லை. அவர்கள் தவிர அனைவரும் (இந்த போராட்டத்தில்) இங்கே இருக்கின்றார்கள். அதோடு, அனைவரும் எங்களுடன் இருப்பது எங்களுக்கு தெரியும். எங்கள் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், நாங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீளப் போவதில்லை.”
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் வைத்த 11 அம்ச கோரிக்கையில் வீரர்களின் சம்பள அதிகரிப்பு, வெளிநாட்டு தொடர்களில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களின் விளையாட அனுமதி வழங்கும் விடயம் என்பன பிரதானமாக அமைந்திருந்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களின் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிசாமுத்தின் சௌத்திரி இது தொடர்பிலான தீர்வு விரைவில் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<