PSL தொடரில் விளையாட பங்களாதேஷ் வீரர்களுக்கு அனுமதி

266

பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் மற்றும் மொஹமதுல்லாஹ் ஆகியோருக்கு பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் லாஹூர் கெலண்டர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த க்ரிஸ் லின்னுக்கு பதிலாக தமிம் இக்பால் இணைக்கப்பட்டுள்ளதுடன், முல்தான் சுல்தான்ஸ் அணியில் மொஹீன் அலிக்கு பதிலாக மொஹமதுல்லாஹ் இணைக்கப்பட்டுள்ளார்.

அனைத்துவகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறும் ஷேன் வொட்சன்!

உள்ளூரில் நடைபெறவிருந்த தொடர் காரணமாக ஆரம்பத்தில் இலங்கையில் நடைபெறவிருந்த லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு, பங்களாதேஷ் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், இலங்கை தொடருக்கான தயார்படுத்தல்கள் காரணமாக, ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு முஷ்தபிசூர் ரஹ்மானுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நவம்பர் 15ம் திகதி பங்களாதேஷில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பங்கபந்து கிரிக்கெட் தொடர், ஒரு வாரம் பிற்போடப்பட்டு ஆரம்பமாகும் என்ற நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவதற்கு தமிம் இக்பால் மற்றும் மொஹமதுல்லாஹ் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“உள்ளூரில் நாம் ஏற்பாடு செய்திருந்த தொடர் நவம்பர் பிற்பகுதிக்கு பிற்போடப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவதற்கான அனுமதியை வழங்க தீர்மானித்துள்ளோம். எனவே, வீரர்கள் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாட முடியும்” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடவுள்ள வீரர்களுக்கு விசேட அனுமதி பங்களாதேஷ் அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ளது. அவர்கள் நாட்டுக்கு திரும்பும் போது, தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படும் என்பதுடன், அதன்பின்னர் அவர்களால் உள்ளூர் தொடரில் விளையாட முடியும்.

Video – IPL தொடரில் கலக்கும் Yorker King நடராஜனின் கதை!

நவம்பர் 14ம் திகதி கராச்சி றும் கிங்ஸ் மற்முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது குவாலிபையர் போட்டி நடைபெறவுள்ளதுடன், எலிமினேட்டர் போட்டி லாஹூர் கெலண்டர்ஸ் மற்றும் பேஷ்வர் ஷல்மி அணிகளுக்கு இடையில் நவம்பர் 15ம் திகதி நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டி நவம்பர் 17ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<