பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக முன்னாள் பெர்முடா வீரர் டேவிட் ஹேம்ப் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் அன்ட்ரூ ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இருந்து இருவரும் தமது கடமைகளை ஆரம்பிக்க உள்ளனர்.
பெர்முடா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டேவிட் ஹேம்ப், கடந்த 2023 முதல் பங்களாதேஷ் உயர் செயல்திறன் பிரிவின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றினார், மேலும் அவர் கடந்த ஆண்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.
53 வயதான ஹேம்ப், முதல்தர போட்டிகளில் புடயஅழசபயnஇ குசநந ளுவயவந மற்றும் றுயசறiஉமளாசைந அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 15,500 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார். அதேபோல, பெர்முடா அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
- UAE அணியின் பயிற்சியாளராகும் முன்னாள் இந்திய வீரர்
- புதிய பயிற்சி மற்றும் கல்வி நிகழ்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்தும் ICC
- இலங்கை வரும் ஆப்கானிஸ்தான் A அணி!
இதனிடையே, டேவிட் ஹேம்ப் 2020-2022 காலப்பகுதியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார். மேலும், அவர் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்ட்ரூ ஆடம்ஸ், நியூசிலாந்து அணிக்காக 47 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முன்னதாக அவர் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான T20i தொடரில் நியூசிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அதேபோல, 2022-23 காலப்பகுதியில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<