மேலும் இரு பங்களாதேஷ் வீரர்களுக்கு ஒரு வருட தடை

246
Bangladesh's Arafat Sunny prepares to deliver a ball during a practice session at Arun Jaitley Cricket Stadium in New Delhi on November 1, 2019, ahead of the first T20 international cricket match between Bangladesh and India. (Photo by Sajjad HUSSAIN / AFP) / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE

பங்களாதேஷ் அணியின் வீரர் சஹாடட் ஹுசைனை தாக்குதலுக்கு தூண்டிய காரணத்துக்காக அரபாத் சன்னி மற்றும்  மொஹமட் சஹிட் ஆகியோருக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒரு வருட தடை விதித்துள்ளது.

இளையோர் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணி வசம்

சுற்றுலா இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் 19….

பங்களாதேஷில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான நெஷனல் கிரிக்கெட் லீக்கின் டாக்கா டிவிஷன் மற்றும் குல்னா டிவிஷன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது (16), சக வீரரான அரபாத் சன்னியை தாக்கிய குற்றச்சாட்டுக்காக சஹாடட் ஹுசைனுக்கு ஐந்து வருட தடை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளில், அரபாத் சன்னி மற்றும்  மொஹமட் சஹிட் ஆகியோர் சஹாடட் ஹுசைனை தாக்குதலுக்கு தூண்டியமை தெரியவந்துள்ள காரணத்தால் இருவருக்கும் தலா ஒவ்வொரு வருடம் தடை வழங்கப்பட்டுள்ளது.

டாக்கா டிவிஷன் மற்றும் குல்னா டிவிஷன் அணிகளுக்கு இடையிலான போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் சஹாடட் ஹுசைன் பந்துவீசிக்கொண்டிருந்த போது, அரபாத் சன்னியிடம் பந்தினை ஒருபக்கம் தேய்த்து புதிதாக்குமாறு கூறியுள்ளார். அதனை அரபாத் தொடர்ந்து மறுத்த காரணத்தால், கோபமடைந்து சஹாடட் ஹுசைன், அரபாத் சன்னியை தாக்கியுள்ளார். எனினும், பின்னர் வீரர்கள் ஒன்றிணைந்து இருவரையும் சமாதனப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்த விசாரணையை போட்டி மத்தியஸ்தர் மேற்கொண்ட போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட சஹாடட் ஹுசைனுக்கு கடந்த 19ம் திகதி இரண்டு வருட இடைக்காலத் தடையுடன் கூடிய, 5 வருட தடையினை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வழங்கியது.

இவரது தடைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் படி, அரபாத் சன்னி மற்றும்  மொஹமட் சஹிட் அகியோர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இரண்டாம் நிலை குற்றங்களை புரிந்துள்ளதால் அவர்களுக்கு ஒரு வருட தடை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

சக வீரரை மைதானத்தில் தாக்கிய வீரருக்கு 5 வருட தடை

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் சஹாடட்…

எவ்வாறாயினும், இவர்களுக்கான தடை உடனடியாக வழங்கப்படவில்லை. அரபாத் சன்னி மற்றும்  மொஹமட் சஹிட் ஆகியோரின் மைதானத்துக்குள் மற்றும் மைதானத்துக்கு வெளியிலான நடவடிக்கைகளை அவதானித்து, இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்கும் பட்சத்தில் உடனடியாக இந்த தடை அமுலுக்கு வரும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவுறுத்தியுள்ளது.

அரபாத் சன்னி பங்களாதேஷ் அணிக்காக 16 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், மொஹமட் சஹிட் 5 டெஸ்ட் மற்றும் ஒரு T20I போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<