பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான பங்களாதேஷ் அணியின் டி20 சர்வதேச குழாம் அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் இன்று (18) வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்பதற்காக முதல் தடவையாக பாகிஸ்தான் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
மூவகை தொடரிலும் விளையாட பாகிஸ்தான் செல்லும் பங்களாதேஷ் அணி
மிக நீண்டகால காத்திருப்பின் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது
குறித்த இருதரப்பு தொடரில் மூன்று டி20 சர்வதேச போட்டிகள், ஒரு போட்டி கொண்ட ஒற்றை ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகிய மூன்று தொடர்கள் நடைபெறவுள்ளது. சுற்றுப்பயணத்தின் முதல் தொடராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) ஆரம்பமாகிறது.
இந்நிலையில் குறித்த டி20 சர்வதேச தொடருக்கான பாகிஸ்தான் டி20 குழாம் கடந்த வியாழக்கிழமை (16) அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில் பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர் நேற்று இரவு நிறைவுக்கு வந்ததுடன் இன்று (18) பங்களாதேஷ் டி20 குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள குழாத்தின்படி டி20 சர்வதேச தொடருக்கான பங்களதேஷ் அணியின் தலைவராக தொடர்ந்தும் செயற்படும் வகையில் சகலதுறை வீரர் மஹ்மதுல்லாஹ் ரியாத் பெயரிடப்பட்டுள்ளார். பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இறுதியாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 சர்வதேச தொடரில் விளையாடியது.
குறித்த தொடரில் பங்கேற்ற குழாத்திலிருந்து பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், முக்கிய வீரர்கள் மீண்டும் டி20 குழாமில் இணைந்துள்ளனர். அந்த வகையில் அணியின் அனுபவ இடதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தமீம் இக்பால் இந்திய அணியுடனான தொடருக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இருந்தாலும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஓய்வில் சென்றிருந்தார்.
பங்களாதேஷை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் டி20 குழாம் அறிவிப்பு
பங்களாதேஷ் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20
இந்நிலையில் தமீம் இக்பால் உபாதை காரணமாக சில டி20 சர்வதேச தொடர்களை இழந்துவந்த நிலையில் இறுதியாக கடந்த 2018 டிசம்பரில் விளையாடியதன் பின்னர் தற்போது இடுப்பு உபாதையிலிருந்து மீண்டு மருத்துவ பரிசோதனையின் பின்னர் பாகிஸ்தான் செல்லும் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார்.
மேலும் கடந்த 2018 ஆகஸ்டில் இறுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20 சர்வதேச போட்டியில் விளையாடிய நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதியில் பங்களாதேஷ் டி20 அணியில் வாய்ப்பை இழந்துவந்த அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ரூபல் ஹூஸைன், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் பிரகாசித்ததன் அடிப்படையில் மீண்டும் டி20 குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.
இவ்வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் கன்னி டி20 போட்டியில் விளையாடிய நிலையில் இதுவரையில் வெறும் 13 டி20 போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள டாக்கா பிளட்டூன் அணியின் 20 வயதுடைய வேகப்பந்துவீச்சாளர் ஹசன் மஹ்மூத் டி20 சர்வதேச அறிமுகம் பெறும் அடிப்படையில் பாகிஸ்தான் தொடருக்கான குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.
நிறைவுக்கு வந்த பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் ஹசன் மஹ்மூத் பெரிதாக பிரகாசிக்காவிட்டாலும், முதல்தர மற்றும் A தர போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சு பிரதியை கொண்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே தேர்வுக்குழுவின் கவனத்தில் ஹசன் மஹ்மூத் பங்களாதேஷ் குழாமில் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவுக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய குல்தீப் யாதவ்
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதலாவது சுழல் பந்துவீச்சாளர்
பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் 9 போட்டிகளில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றிய சுழல் பந்துவீச்சாளர் தைஜூல் இஸ்லாம், இந்திய சுற்றுப்பயணத்தில் பங்களாதேஷ் குழாமில் இடம்பெற்றிருந்த மற்றுமொரு சுழல் பந்துவீச்சாளர் அறபாத் சன்னி, வேகப்பந்துவீச்சாளர் அபூ ஹைதர் மற்றும் துடுப்பாட்ட சகலதுறை வீரர் மொஸாடீக் ஹூஸைன் ஆகியோர் டி20 குழாமிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பங்களாதேஷ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரும் விக்கெட் காப்பாளருமான முஸ்பிகூர் ரஹீம் பாதுகாப்பு காரணங்களினால் முற்கூட்டியே பாகிஸ்தான் செல்ல மறுத்ததன் காரணமாக அவர் பாகிஸ்தான் தொடருக்கான டி20 சர்வதேச குழாமில் இடம்பெறவில்லை.
பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் சதமடித்து அசத்திய 21 வயது இளம் வீரர் நஜ்முல் ஹூஸைன் சண்டோ மீண்டும் டி20 குழாமில் இடம்பெற்றுள்ளார். மேலும் குறித்த தொடரில் குல்னா டைகர்ஸ் அணியில் அசத்திய சகலதுறை வீரர் மெஹிதி ஹசன் மிராஸ் ஒரு வருடத்தின் பின்னர் பங்களாதேஷ் குழாமில் இணைந்துள்ளார்.
பாகிஸ்தான் சென்று விளையாட பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹிம் மறுப்பு
பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அந்த அணியின் அனுபவ வீரரான
பாகிஸ்தான் தொடருக்கான 15 பேர் கொண்ட பங்களாதேஷ் குழாம்
மஹ்மதுல்லாஹ் ரியாத் (அணித்தலைவர்), தமீம் இக்பால், சௌம்யா சர்கார், மொஹமட் நயிம், நஜ்முல் ஹூஸைன், லிட்டன் தாஸ், மொஹமட் மிதுன், அபிப் ஹூஸைன், மெஹிதி ஹசன் மிராஸ், அமினுல் இஸ்லாம், முஸ்தபீசுர் ரஹ்மான், சபியுல் இஸ்லாம், அல்-அமீன் ஹூஸைன், ரூபல் ஹூஸைன், ஹசன் மஹ்மூத்
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க