பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தமது பயிற்சியாளர்கள் குழாத்துக்குள் புதிதாக விளையாட்டு உளவியலாளர் (Sports Psychologist) ஒருவரை இணைக்கவிருப்பதாக தெரிவித்துள்ளது.
விளையாட்டு உளவியலாளர் ஒருவர் இணைக்கப்படவிருக்கும் விடயத்தினை, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) சிரேஷ்ட வைத்திய அதிகாரியாக இருக்கும் தேபாஷிஷ் சௌத்ரி கிரிக்பஸ் (cricbuzz) செய்திச் சேவையிடம் உறுதி செய்திருக்கின்றார்.
ஆகஸ்டில் நடைபெறவுள்ள கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர்
இந்த ஆண்டுக்கான (2020) கரீபியன் ப்ரீமியர்
அந்தவகையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தாம் இணைக்கவுள்ள விளையாட்டு உளவியலாளராக கனடாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அலி கானை தேர்வு செய்திருப்பதோடு அவரிடம் முதல் கட்ட ஆலோசனைகள் பெற பங்களாதேஷ் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணி, மகளிர் கிரிக்கெட் அணி ஆகியவற்றினை அனுப்பவுள்ளது.
”(விளையாட்டு உளவியலாளர் ஒருவரை நியமிக்க) நாங்கள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் விளையாட்டு விருத்திப் பிரிவிடம் இருந்தும் மகளிர் பிரிவிடம் இருந்தும் அனுமதியினைப் பெற்றிருக்கின்றோம். அத்தோடு, மிக விரைவில் மகளிர் அணியினையும், 19 வயது அணியினையும் ஆலோசனைகளுக்கு உட்படுத்தவுள்ளோம்” என தேபாஷிஷ் சௌத்ரி குறிப்பிட்டிருந்தார்.
விளையாட்டு உளவியலாளரான அலி கான், ஏற்கனவே பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் கொண்டிருப்பதோடு, பங்காளி மொழி பேசுவதிலும் திறமையானவராக காணப்படுகின்றார். அதன்படி, பங்காளி மொழி பேசும் ஆற்றல் கொண்ட ஒருவர் வீரர்களுக்கு ஆலோசனை தருவது சிறப்பான விடயமாக இருக்கும் எனவும் தேபாஷிஷ் சௌத்ரி குறிப்பிட்டிருந்தார்.
”நாங்கள் அவரை (அலி கானை) தெரிவு செய்வதற்கான ஒரு காரணம் அவருக்கு பங்காளி மொழி தெரிந்திருக்கின்றமையாகும். அவருக்கு எங்களது கலாச்சாரம் பற்றிய அறிவு இருக்கின்றது. நாங்கள் ஆரம்பத்தில் விளையாட்டு உளவியாலாளர் ஒருவர் போதும் என்று இருந்தோம். தற்போதைய நிலைமைக்கு எங்களுக்கு மனநிலை தொடர்பான பயிற்சிகளை வழங்கும் ஒருவரின் தேவை, விளையாட்டு உளவியலாளர் ஒருவரை விட தேவையாக இருக்கின்றது.
நாங்கள் இந்த வழியில் ஆரம்பிக்கின்றோம். அதனால், எங்களுக்கு விளையாட்டு உளவியலாளர் ஒருவர் தேவையில்லை என்பது இல்லை. அது தேவைப்படும் போது நாங்கள் எதிர்காலத்தில் உள்வாங்கிக் கொள்வோம். ஆனால், மனநிலை தொடர்பான பயிற்சிகள் வழங்கும் நபரே நமக்கு இப்போது சரியான தேவையாக இருக்கின்றார்.”
உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல்
முன்னதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரசல் டொமின்கோ, பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனநிலை தொடர்பில் பேசுவதற்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்ததோடு, இந்த கருத்திற்கு அமையவே தேபாஷிஷ் சௌத்ரி மனநிலை தொடர்பான பயிற்சிகளை வழங்கும் ஒருவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எதிர்பார்ப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க