யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிகள் இடையில் 17ஆவது முறையாக இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வருடாந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
சமனிலையுடன் முடிவுக்கு வந்த 113வது வடக்கின் பெரும் சமர்
யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ். மத்திய கல்லூரி மற்றும் யாழ்..
அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டி நேற்று (16) சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியின் தலைவர் S. மதுசன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தேர்வு செய்திருந்தார்.
இப்போட்டிக்கான யாழ். மத்திய கல்லூரி அணி இந்த ஆண்டு 113ஆவது தடவையாக நடைபெற்ற 3 நாட்கள் கொண்ட வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் ஆடிய நிதர்சன் மற்றும் பிரவின் ராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கி குகதாஸ் மற்றும் பிரசாந்த் ஆகியோரை இணைத்திருந்தது.
மறுமுனையில் 113ஆவது வடக்கின் சமரில் பங்குபற்றிய ஏனைய பாடசாலையான சென். ஜோன்ஸ் கல்லூரி அணி சுகேதன், கரிஷன் மற்றும் திசான் ஆகியோரை எல்ஷான், வினோஜன் மற்றும் ரதுசன் ஆகியோருக்கு பதிலாக உள்வாங்கியிருந்தது.
தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 46 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 221 ஓட்டங்களை குவித்து கொண்டது.
Photos : St John’s College vs Jaffna Central College – Battle of the North | 17th Limited Overs Encounter
ThePapare.com | Murugaiah Saravanan | 16/03/2019 Editing and re-using images…
யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் S. சாரங்கன் 36 ஓட்டங்களுடன் பதிவு செய்ய, A. நிதுசன் 32 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சில் இளம் வீரர்களான அன்டன் அபிஷேக் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, அன்டன் சரன் 3 விக்கெட்டுகளை சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 222 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு அன்டோனிப்பிள்ளை சுகேதன் மற்றும் அணித்தலைவர் மேர்பின் அபினாஷ் ஆகியோர் அரைச்சதங்கள் மூலம் உதவினர்.
இந்த இரண்டு வீரர்களினதும் அரைச்சத உதவிகளோடு சென். ஜோன்ஸ் கல்லூரி அணி போட்டியின் வெற்றி இலக்கினை 48 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 222 ஓட்டங்களுடன் அடைந்தது.
சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற அன்டோனிப்பிள்ளை சுகேதன் 83 பந்துகளில் 7 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 61 ஓட்டங்களை குவித்திருந்தார்.
Photos : Jaffna Central College vs St. John’s College – 113th Battle of the North | Day 3
ThePapare.com | Jeyendra Logendran | 09/03/2019 Editing and re-using images..
இதேநேரம், சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் மேர்பின் அபினாஷ் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 53 ஓட்டங்களை பெற்றிருந்தார். அபினாஷ் கடந்த ஆண்டு இடம்பெற்ற வடக்கின் சமர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் பெரும் போட்டியிலும் அரைச்சதம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பின்வரிசையில் துடுப்பாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் வெற்றியை அதிரடியின் மூலம் ஊர்ஜிதம் செய்த தினோஷனும் 2 சிக்ஸர்களுடன் 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நின்றார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் அதன் அணித்தலைவர் S. மதுசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியும், T. விதுசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு அழுத்தம் தந்திருந்த போதிலும் அவர்களது முயற்சி வீணாகியிருந்தது.
இவ்வெற்றியோடு சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட வருடாந்த கிரிக்கெட் பெரும் போட்டியில் தொடர்ச்சியாக நான்காவது தடவை வெற்றியை பதிவு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இதுவரையில் நடைபெற்றுள்ள இந்தப் போட்டிகளில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 10 தடவைகளும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 07 தடவைகளும் வெற்றி பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sarangan Sritharan | b Karishan Kuganesaran | 36 | 82 | 3 | 0 | 43.90 |
Iyalarasan Kamalarasa | c Sabesan Kamalapalan b Abishek Anton | 8 | 26 | 1 | 0 | 30.77 |
Inthujan Balarupan | c Thanujan Christy Prasanna b Saraan Anton Selvathas | 22 | 22 | 3 | 0 | 100.00 |
Jeyatharsan Antony Dias | c Hemathushan Mahendran b Abinash Murfin | 6 | 10 | 1 | 0 | 60.00 |
Mathusan Selvarasa | run out (Abinash Murfin) | 15 | 38 | 0 | 0 | 39.47 |
Nithusan Aniston | c Tishan Kanagaratnam b Saraan Anton Selvathas | 32 | 29 | 4 | 0 | 110.34 |
Viyaskanth Vijayakanth | c Abinash Murfin b Saraan Anton Selvathas | 11 | 16 | 1 | 0 | 68.75 |
Kugasathus Balarupan | lbw b Abishek Anton | 26 | 30 | 2 | 1 | 86.67 |
Rajclinton Rajaratnam | c Sowmiyan Naganthirarajah b Abishek Anton | 20 | 22 | 2 | 0 | 90.91 |
Pirashanth Sivanesan | c Sowmiyan Naganthirarajah b Abishek Anton | 6 | 2 | 0 | 1 | 300.00 |
Vithusan Theesan | not out | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 39 (b 9 , lb 2 , nb 1, w 27, pen 0) |
Total | 221/10 (46 Overs, RR: 4.8) |
Fall of Wickets | 1-24 (7.5) Iyalarasan Kamalarasa, 2-73 (16.5) Inthujan Balarupan, 3-87 (20) Jeyatharsan Antony Dias, 4-98 (26.5) Sarangan Sritharan, 5-136 (32.1) Mathusan Selvarasa, 6-163 (36.4) Viyaskanth Vijayakanth, 7-163 (37) Nithusan Aniston, 8-214 (45.2) Rajclinton Rajaratnam, 9-221 (45.5) Pirashanth Sivanesan, 10-221 (46) Kugasathus Balarupan, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Dinoshan Theivendram | 8 | 1 | 31 | 0 | 3.88 | |
Abishek Anton | 8 | 0 | 37 | 4 | 4.62 | |
Saraan Anton Selvathas | 10 | 1 | 21 | 3 | 2.10 | |
Tishan Kanagaratnam | 1 | 0 | 13 | 0 | 13.00 | |
Abinash Murfin | 10 | 1 | 58 | 1 | 5.80 | |
Hemathushan Mahendran | 3 | 0 | 11 | 0 | 3.67 | |
Karishan Kuganesaran | 5 | 1 | 23 | 1 | 4.60 | |
Sowmiyan Naganthirarajah | 1 | 0 | 16 | 0 | 16.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Sowmiyan Naganthirarajah | c Viyaskanth Vijayakanth b Nithusan Aniston | 18 | 59 | 1 | 0 | 30.51 |
Thanujan Christy Prasanna | c Nithusan Aniston b Mathusan Selvarasa | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Sukethan Antonypillai | c Nithusan Aniston b Vithusan Theesan | 61 | 83 | 7 | 2 | 73.49 |
Hemathushan Mahendran | c Mathusan Selvarasa b Vithusan Theesan | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Abinash Murfin | b Pirashanth Sivanesan | 53 | 64 | 4 | 1 | 82.81 |
Karishan Kuganesaran | c Rajclinton Rajaratnam b Viyaskanth Vijayakanth | 23 | 42 | 0 | 0 | 54.76 |
Dinoshan Theivendram | not out | 24 | 12 | 0 | 2 | 200.00 |
Sabesan Kamalapalan | b Mathusan Selvarasa | 3 | 5 | 0 | 0 | 60.00 |
Abishek Anton | b Mathusan Selvarasa | 8 | 7 | 1 | 0 | 114.29 |
Saraan Anton Selvathas | not out | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Extras | 27 (b 9 , lb 0 , nb 1, w 17, pen 0) |
Total | 222/8 (48 Overs, RR: 4.62) |
Did not bat | Tishan Kanagaratnam, |
Fall of Wickets | 1-9 (3.1) Thanujan Christy Prasanna, 2-71 (20.4) Sowmiyan Naganthirarajah, 3-80 (23.2) Hemathushan Mahendran, 4-109 (27.3) Sukethan Antonypillai, 5-180 (42.4) Karishan Kuganesaran, 6-186 (43.4) Abinash Murfin, 7-191 (44.5) Sabesan Kamalapalan, 8-203 (46.3) Abishek Anton, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Iyalarasan Kamalarasa | 7 | 0 | 43 | 0 | 6.14 | |
Mathusan Selvarasa | 9 | 0 | 24 | 3 | 2.67 | |
Vithusan Theesan | 9 | 0 | 32 | 2 | 3.56 | |
Nithusan Aniston | 7 | 0 | 21 | 1 | 3.00 | |
Kugasathus Balarupan | 5 | 0 | 29 | 0 | 5.80 | |
Viyaskanth Vijayakanth | 5 | 1 | 24 | 1 | 4.80 | |
Pirashanth Sivanesan | 6 | 0 | 40 | 1 | 6.67 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<