துடுப்பாட்டத்தில் செய்த தவறே தோல்விக்கு காரணம் என்கிறார் சந்திமால்

813

அவுஸ்திரேலிய பந்துவீச்சார்களுக்கு எதிராக எமது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக் குவிப்பதற்கு சரியான நுணுக்கங்களை கையாள வேண்டும் எனவும், அடுத்த போட்டியில் சிறந்த திட்டத்துடன் அவுஸ்திரேலிய அணியை சந்திக்க தயாராகவுள்ளதாகவும் இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 24ஆம் திகதி பிரிஸ்பேனில் பகல்இரவு ஆட்டமாக நடைபெற்றது.

இலங்கை குழாத்துடன் இணையவுள்ள புதுமுக சகலதுறை வீரர்

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்து .

இதில், பெட் கம்மின்சின் சிறப்பான பந்து வீச்சால் பொறுப்பற்ற துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை வீரர்கள், இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில்,

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட இந்த தோல்வி குறித்து ஓர் அணியாக உண்மையில் கவலைப்படுகிறோம். எமது வீரர்களின் மோசமான துடுப்பாட்டமே இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. உண்மையில் எமது துடுப்பாட்ட வரிசையைத் தான் முதலில் சரிசெய்ய வேண்டும். அவுஸ்திரேலிய ஆடுகளங்களில் 300 ஓட்டங்களைக் குவிப்பது என்பது மிகப் பெரிய சவாலாகும். எனவே, அந்த இலக்கை அடைவதற்கு எமது தவறுகளை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும்.

போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் எதிர்பார்த்தளவு ஓட்டங்களை எம்மால் குவிக்க முடியாமல் போனது. முதல் இன்னிங்ஸுக்காக 250 அல்லது 300 ஓட்டங்களைக்கு குவித்திருந்தால் போட்டி எமக்கு சாதகமாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன். ஆனால், அனைத்து கௌரவமும் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களையே சாரும். அதிலும் குறிப்பாக, பெட் கம்மின்ஸ் எப்போதும் சரியான இடங்களில் பந்துவீசி எமக்கு நெருக்கடி கொடுத்திருந்தார்” என தெரிவித்தார்.

கம்மின்ஸின் வேகத்தால் மூன்று நாட்களில் முடிவை எட்டிய முதல் டெஸ்ட்

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிராக பிரிஸ்பேன் த கெப்பா மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்

பொதுவாக, கெப்பா மைதானத்தில் விளையாடும் போது மேலதிகமாக பவுண்சர்கள் காணப்படும் என்பதை நாம் நன்கு அறிந்து வைத்திருந்தோம். எனவே துடுப்பாட்ட வீரர்களாக எம்மால் அதைதான் சரிசெய்ய முடியாமல் போனது. அத்துடன், இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் பெட் கம்மின்ஸின் பந்துகளுக்கு நாம் ஒருபோதும் முகங்கொடுத்தது கிடையாது. ஆனால் அதையே போட்டியின் தோல்விக்குக் காரணமாகக் கூறிவிட முடியாது. உண்மையில் ஓட்டங்களைப் பெற்றுக்கொள்கின்ற முறையொன்றை நாம் பின்பற்ற வேண்டும். எனவே, அடுத்த போட்டியில் எமது வீரர்கள் சரியான திட்டத்துடன் களமிறங்குவார்கள் என நான் நம்புகிறேன்.  

உண்மையில் கடந்த காலங்களில் விக்கெட் காப்பில் ஈடுபட்டதால் 5ஆம் இலக்க வீரராக களமிறங்கியிருந்தேன். ஆனால், இந்தப் போட்டியில் நிரோஷன் டிக்வெல்ல விக்கெட் காப்பாளராகச் செயற்பட்டு வருவதால் தொடர்ந்து 3ஆம் இலக்கத்தில் களமிறங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கைக்காக நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வந்த லஹிரு திரிமான்னவின் ஆட்டமிழப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பி கேள்விக்கு சந்திமால் பதிலளிக்கையில்,

திரிமான்னவின் ஆட்டமிழப்பிற்கான எந்தவொரு ஆதாரங்களும் இருக்கவில்லை என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்தோம். ஆனால் நடுவரின் இறுதி முடிவை மாற்ற முடியாது. சிறியளவு சத்தமொன்று கேட்டதால் அதை ஆட்டமிழப்பாக நடுவர் அறிவித்திருந்தார். எனவே நடுவரின் தீரப்புக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

சிறந்த ஆட்டத்தை தந்தால் மட்டுமே அதிசயத்தை நிகழ்த்த முடியும்: சந்திமால்

சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை

இதுஇவ்வாறிருக்க, இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இலங்கை அணியை வீழ்த்தியது தொடர்பில் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணித் தலைவர் டிம் பெய்ன் கருத்து தெரிவிக்கையில்,

முதல் இன்னிங்ஸின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ட்ராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லெபுஸ்சேக்ன் ஆகியோரின் இணைப்பாட்டம் அவுஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. எமது இளம் வீரர்கள் அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். அதேபோல, அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜெய் ரிச்சர்ட்ஸன் வெளிப்படுத்திய திறமையை பாராட்ட வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் எமது அர்ப்பணிப்பை நாம் கைவிடவில்லை. இளம் வீரர்களுடன் பெற்றுக்கொண்ட இந்த வெற்றி குறித்து பெருமைப்படுகிறோம். அத்துடன், பெட் கம்மின்ஸ் துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்து சிறப்பாக பந்துவீசுகின்றார். ஓர் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. எனவே, எதிர்வரும் காலங்களிலும் அவர் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்துவார் என தான் நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க