“கேம்ப் நௌ” பெயரை விற்கும் பார்சிலோனா

147

ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து கழகமான பார்சிலோனா, கொரோனா தடுப்புக்கு நிதி திரட்ட தனது மைதானத்தின் பெயரை விற்க முடிவு செய்துள்ளது. 

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கழகங்களில் ஒன்று பார்சிலோனா. இந்த கழகத்தில்தான் உலகின் தலைசிறந்த வீரரான மெஸ்சி விளையாடி வருகிறார்

ஸ்பெய்னின் கேட்டலானில் பார்சிலோனாவுக்கு சொந்தமான கேம்ப் நௌ மைதானம் உள்ளது. இந்த மைதானம் 1957இல் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் 99 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பது குறிப்படத்தக்கது

பார்சிலோனா பனிப் போர்: மெஸ்ஸியின் எதிர்காலம் என்ன?

ஸ்பெயினின் பிரபல பார்சிலோனா கழகத்திற்குள்……..

எனவே, மைதானம் நிர்மானிக்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை அந்த மைதானத்தின் பெயரை அனுசரணைக்காக அந்தக் கழகம் வழங்கவில்லை. இதனால் கேம்ப் நௌ என்றே அழைக்கப்பட்டு வருகிறது.  

தற்போது முழு உலகையும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தொற்றால் ஸ்பெயின் அதிக அளவில் பாதித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில் கொரோனா தடுப்புக்கு நிதி திரட்டுவதற்காககேம்ப் நௌ” பெயரை அனுசரணைக்காக விற்க முடிவு செய்துள்ளது பார்சிலோனா. அதன்படி ஒரு வருடத்திற்கு கேம்ப் நொள என்பதற்கு பதிலாக தங்களது நிறுவனங்களின் பெயரை அனுசரணையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  

மைதானத்தின் பெயரை அனுசரணைக்காக வழங்குவதன் மூலம் கிடைக்கும் நிதி அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் என பார்சிலோனா கழகத்தின் தலைமை நிர்வாகி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

ஊதியக் குறைப்புக்கு பார்சிலோனா வீரர்கள் இணக்கம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல்………

இதுதொடர்பில், பார்சிலோனா கழகத்தின் துணைத் தலைவர் ஜோர்டி கார்டனர் AFP ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில்

“நாங்கள் முழு உலகத்துக்கும் ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம். முதன்முறையாக தங்கள் நிறுவனத்தின் பெயரை கேம்ப் நௌவில் வைக்க வாய்ப்பு கிடைக்கவுள்ளது.  

இதன்மூலம் கிடைக்கும் வருவாய் பார்சிலோனாவுக்கு மட்டுமின்றி மனிதகுலத்தில் உள்ள அனைவருக்கும் செல்லும்” என்று தெரிவித்தார்.

அதுமாத்திரமின்றி, மைதானத்தின் பெயர் கேம்ப் நௌ என்று தொடர்ந்து நீடிக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், பக்கத்தில் அனுசரணையாளர்களின் பெயர் சேர்க்கப்படும் என குறிப்பிட்டார்.  

இதன்படி, எதிர்வரும் வாரங்களில் ஒரு ஒப்பந்தத்தை முடிப்பதாக நம்புவதாக பார்சிலோனா கழகம் தெரிவித்துள்ளது

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகும் பார்சிலோனா கழகம்

பார்சிலோனா கழகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அதன் ஆறு பணிப்பாளர்கள் ….

அத்துடன் எதிர்வரும் ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் கழக உறுப்பினர்களின் பொது சபை கூட்டத்தில் இந்த முடிவை அங்கீகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

எதுஎவ்வாறாயினும், 2023-24 பருவகாலத்தில் பார்சிலோனா கழகத்தின் சொந்த மைதானத்தின் பெயரை விளம்பர அனுசரணைக்காக விற்பனை செய்ய அந்தக் கழகம் திட்டமிட்டிருந்தது

அத்துடன், அந்தக் காலப்பகுதியில், அரங்கம் மற்றும் பிற வசதிகளை புதுப்பிப்பதற்காக 25 ஆண்டு ஒப்பந்தத்திற்கு 300 மில்லியன் யூரோக்களை (326 மில்லியன்) செலுத்துவதற்கும் தீரமானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

  >> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<