இலங்கை வரும் பங்களாதேஷ் மகளிர் A அணி

ICC Rankings

106

பங்களாதேஷ் மகளிர் A அணி செப்டம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் மகளிர் A அணி எதிர்வரும் 5ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

>> ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா நியமனம்!

அதன்படி இலங்கை வரும் பங்களாதேஷ்அணி எதிர்வரும் செப்டம்பர் 8 மற்றும் 10ம் திகதிகளில் இரண்டு ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டிகளில் இலங்கை மகளிர் A அணியை எதிர்கொள்கிறது. 

இதில் முதல் போட்டி பனாகொடை இராணுவ மைதானத்திலும், இரண்டாவது போட்டி தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. 

அதனை தொடர்ந்து செப்டம்பர் 12, 13, 15, 17 மற்றும் 19ம் திகதிகளில் ஐந்து T20 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் இரண்டு T20 போட்டிகள் பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளன. அதனை தொடர்ந்து மூன்றாவது போட்டி எஸ்.எஸ்.சி மைதானத்திலும், அதனை தொடர்ந்து நான்காவதும், ஐந்தாவதும் போட்டிகள் முறையே தேர்ஸ்டன் மற்றும் கோல்ட்ஸ் மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

போட்டி அட்டவணை 

  • முதல் ஒருநாள்செப்டம்பர் 8 (பனாகொடை) 
  • 2வது ஒருநாள்செப்டம்பர் 10 (தேர்ஸ்டன் 
  • முதல் T20 – செப்டம்பர் 12 (பி.சரா) 
  • 2வது T20 – செப்டம்பர் 13 (பி.சரா) 
  • 3வது T20 – செப்டம்பர் 15 (எஸ்.எஸ்.சி) 
  • 4வது T20 – செப்டம்பர் 17 (தேர்ஸ்டன்) 
  • 5வது T20 – செப்டம்பர் 19 (கோல்ட்ஸ்) 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<