பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது T20I போட்டியில் நிலக்ஷி டி சில்வாவின் அபாரமான துடுப்பாட்டத்தின் உதவியுடன் இலங்கை மகளிர் அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.
முதலிரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றது.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான மே.இ.தீவுகள் குழாம் அறிவிப்பு
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், துடுப்பாட்டத்தில் சிறந்த ஆரம்பம் கிடைக்கப்பெற்றது.
வேகமான ஆரம்பத்துடன் அணித்தலைவி சமரி அதபத்து இன்னிங்ஸை ஆரம்பித்தார். இவர் 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள மறுமுனையில் ஹர்ஷிதா சமரவிக்ரம 42 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்று தன்னுடைய அரைச்சதத்தை பதிவுசெய்தார்.
இவர்கள் இருவரின் இன்னிங்ஸையடுத்து நிலக்ஷி டி சில்வா மற்றுமொரு அபாரமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். அதிரடியாக ஓட்டங்களை குவித்த இவர் 39 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியை பொருத்தவரை எதிர்பார்க்கப்பட்ட ஆரம்பம் கிடைக்கவில்லை. மத்தியவரிசையில் ஷோபனா மொஷ்டாரி (30 ஓட்டங்கள்) மற்றும் அணித்தலைவி நீகர் சுல்தானா (31 ஓட்டங்கள்) ஆகியோர் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும் ஏனைய வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பங்களாதேஷ் அணி 20 ஓவர்களை முழுமையாக ஆடிய போதும் அவர்களால் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்ததுடன், 44 ஓட்டங்களால் தோல்வியடைந்து தொடரை 2-1 என இழந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் உதேசிகா பிரபோதனி, காவ்யா கவிந்தி மற்றும் இனோகா ரணவீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamari Athapaththu | c Fargana Hoque Pinky b Nahida Akter | 32 | 23 | 3 | 2 | 139.13 |
Vishmi Gunaratne | c Fahima Khatun b Rabeya Khan | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Harshitha Samarawickrama | not out | 51 | 42 | 6 | 0 | 121.43 |
Anushka Sanjeewani | lbw b Fahima Khatun | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Nilakshi de Silva | not out | 63 | 39 | 4 | 4 | 161.54 |
Extras | 6 (b 0 , lb 4 , nb 0, w 2, pen 0) |
Total | 158/3 (20 Overs, RR: 7.9) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Jahanara Alam | 4 | 0 | 44 | 0 | 11.00 | |
Sanjida Akter Meghla | 4 | 0 | 22 | 0 | 5.50 | |
Rabeya Khan | 4 | 0 | 20 | 1 | 5.00 | |
Nahida Akter | 4 | 0 | 37 | 1 | 9.25 | |
Fahima Khatun | 4 | 0 | 31 | 1 | 7.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Fargana Hoque Pinky | lbw b Kawya Kavindi | 10 | 20 | 0 | 0 | 50.00 |
Rubya Haider | b Sugandika Kumari | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Sobhana Mostary | c Oshadi Ranasinghe b Inoka Ranaweera | 30 | 25 | 2 | 2 | 120.00 |
Nigar Sultana | b Kawya Kavindi | 31 | 33 | 2 | 0 | 93.94 |
Murshida Khatun | st Anushka Sanjeewani b Udeshika Prabodhani | 8 | 14 | 0 | 0 | 57.14 |
Ritu Moni | c Kavisha Dilhari b Inoka Ranaweera | 11 | 9 | 1 | 0 | 122.22 |
Nahida Akter | b Udeshika Prabodhani | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Fahima Khatun | not out | 9 | 6 | 1 | 0 | 150.00 |
Rabeya Khan | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 9 (b 0 , lb 4 , nb 0, w 5, pen 0) |
Total | 114/7 (20 Overs, RR: 5.7) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Udeshika Prabodhani | 4 | 0 | 17 | 2 | 4.25 | |
Sugandika Kumari | 4 | 0 | 19 | 1 | 4.75 | |
Kawya Kavindi | 4 | 0 | 28 | 2 | 7.00 | |
Oshadi Ranasinghe | 2 | 0 | 15 | 0 | 7.50 | |
Inoka Ranaweera | 4 | 0 | 17 | 2 | 4.25 | |
Kavisha Dilhari | 2 | 0 | 14 | 0 | 7.00 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<