Home Tamil இறுதி ஓவர்வரை போராடி தோல்வியடைந்த இலங்கை மகளிர்!

இறுதி ஓவர்வரை போராடி தோல்வியடைந்த இலங்கை மகளிர்!

Bangladesh women's tour of Sri Lanka 2023

303

இலங்கை மகளிர் அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற முதல் T20i போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணிக்கு, சமரி அதபத்து மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

>> KL ராகுலுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

இலங்கை அணிக்காக வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய இவர் இந்தப் போட்டியில் 28 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஒரு கட்டத்தில் இலங்கை அணி 8.4 ஓவர்களில் 64 ஓட்டங்களை பெற்றிருந்தது.

சமரி அதபத்துவின் ஆட்டமிழப்பின் பின்னர் வழமைப்போன்று இலங்கை அணியின் ஓட்டவேகம் குறைய தொடங்கியது. எனினும் அணிக்காக மறுமுனையில் ஓட்டங்களை குவித்த ஹர்ஷிதா சமரவிக்ரம 44 பந்துகளில் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, இறுதிவரை ஆட்டமிக்காமல் துடுப்பெடுத்தாடிய நிலக்ஷி டி சில்வா 29 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

Photo Album – Bangladesh Women tour of Sri Lanka 2023 – 1st T20I

இவர்களை தவிர்த்து ஏனைய வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க தவறிய நிலையில், இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் மகளிர் அணியின் பந்துவீச்சில் பாதிமா கஹ்டுன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து சற்று சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கியிருந்த பங்களாதேஷ் அணி ஆரம்பத்தில் மந்தமான ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை குவித்தது. குறிப்பாக முதல் 2 விக்கெட்டுகளையும் 23 ஓட்டங்களுக்கு இழந்திருந்தது.

இருப்பினும் அணியின் தலைவி நீகர் சுல்தானா வேகமாகவும், நேர்த்தியானதுமான துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றை நகர்த்தினார். முதல் 10 ஓவர்களில் 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த பங்களாதேஷ் அணி பிற்பாதியில் அபாரமாக ஆடியது.

நீகர் சுல்தானா இலங்கை அணிக்கு சவால் கொடுத்து அரைச்சதம் கடந்ததுடன், கடைசி 2 ஓவர்களில் 25 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இதன்போது சமரி அதபத்து பந்து ஓவரை வீச, 19வது ஓவரில் 17 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற நீகர் சுல்தானா 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களை பெற, ரிது மோனி 33 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் உதேசிகா பிரபோதனி 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் T20i போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டாவது T20i போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (11) நடைபெறவுள்ளது.

Result


Sri Lanka Women
145/6 (20)

Bangladesh Women
146/4 (19.5)

Batsmen R B 4s 6s SR
Chamari Athapaththu c Sobhana Mostary b Nahida Akter 38 28 2 3 135.71
Vishmi Gunaratne c Rabeya Khan b Fariha Trisna 11 8 2 0 137.50
Harshitha Samarawickrama c Fariha Trisna b Sultana Khatun 45 44 5 0 102.27
Nilakshi de Silva not out 29 28 1 0 103.57
Hasini Perera b Fahima Khatun 1 3 0 0 33.33
Kavisha Dilhari c Nahida Akter b Fahima Khatun 0 1 0 0 0.00
Anushka Sanjeewani st Nigar Sultana b Rabeya Khan 0 2 0 0 0.00
Oshadi Ranasinghe -select- b 8 8 1 0 100.00


Extras 13 (b 2 , lb 0 , nb 2, w 9, pen 0)
Total 145/6 (20 Overs, RR: 7.25)
Bowling O M R W Econ
Fariha Trisna 4 0 35 1 8.75
Sultana Khatun 4 0 30 1 7.50
Nahida Akter 4 0 35 1 8.75
Rabeya Khan 4 0 23 1 5.75
Fahima Khatun 4 0 20 2 5.00


Batsmen R B 4s 6s SR
Shamima Sultana c Kavisha Dilhari b Kawya Kavindi 5 6 0 0 83.33
Rubya Haider c Hasini Perera b Udeshika Prabodhani 9 16 1 0 56.25
Sobhana Mostary st Anushka Sanjeewani b Oshadi Ranasinghe 17 24 1 0 70.83
Nigar Sultana not out 75 51 7 2 147.06
Ritu Moni run out (Anushka Sanjeewani) 33 23 4 0 143.48
Murshida Khatun not out 0 0 0 0 0.00


Extras 7 (b 0 , lb 3 , nb 1, w 3, pen 0)
Total 146/4 (19.5 Overs, RR: 7.36)
Bowling O M R W Econ
Udeshika Prabodhani 3 0 7 1 2.33
Kawya Kavindi 2 0 14 1 7.00
Oshadi Ranasinghe 4 0 39 1 9.75
Inoka Ranaweera 3.5 0 29 0 8.29
Kavisha Dilhari 3 0 21 0 7.00
Chamari Athapaththu 4 0 33 0 8.25



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<