பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 218 ஓட்டங்களால் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஜிம்பாப்வே அணி 17 வருடங்களின் பின் சொந்த மண்ணில் அல்லாமல் வெளியில் பெற்ற வரலாற்று வெற்றியுடன் 1-0 என தொடரில் முன்னிலையில் இருந்தது. எனினும், தொடரை சமன் செய்யும் நோக்கில் கடந்த 11 ஆம் திகதி தொடரின் இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. பங்களாதேஷ் அணி சார்பாக மொஹமட் மிதுன் மற்றும் காலித் அஹமட் என இரு வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகியிருந்தனர்.
ஐந்து ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி
பங்களாதேஷுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய
தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளும் 26 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டிருந்தது. எனினும் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த முஃமினுல் ஹக் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் இணைந்து 266 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை முஃமினுல் ஹக் 161 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும்போது பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 303 பெற்றிருந்தது.
முஷ்பிகுர் ரஹீம் முதல் நாளில் பெற்ற 111 ஓட்டங்களுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த பங்களாதேஷ் அணி முஷ்பிகுர் ரஹீமின் இரட்டை சதத்துடன் 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் 522 ஓட்டங்களை பெற்று தமது இன்னிங்ஸை நிறுத்திக் கொண்டது. 8 ஆவது விக்கெட்டுக்காக முஷ்பிகுர் ரஹீம் மற்றும் மெஹ்தி ஹசன் மிராஸ் ஆகியோர் பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 144 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டனர். ஆட்டமிழக்காமல் 219 ஓட்டங்களை பெற்று முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் போட்டிகளில் தனது அதிக பட்ச ஓட்டங்களை பதிவு செய்தார். அது தவிர மெஹ்தி ஹசன் மிராஸ் ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களையும் பெற்றிருந்தார். பந்து வீச்சில் ஜிம்பாப்வே அணி சார்பாக கைல் ஜார்விஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸில் விளையாடிய ஜிம்பாப்வே அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 218 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அவ்வணி சார்பாக பிரண்டன் டைய்லர் 110 ஓட்டங்களையும் பீட்டர் மோர் 83 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச்சேர்த்தனர். பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசிய தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளையும் மெஹ்தி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
அரசியலில் கால்பதிக்கும் பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான 35 வயதுடைய மஷ்ரபி மோர்தசா எதிர்வரும்
முதல் இன்னிங்ஸில் 218 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி மஹ்மதுல்லா மற்றும் மொஹமட் மிதுன் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்ட உதவியுடன் 6 விக்கெட்டுகள் இழந்து 224 ஓட்டங்கள் பெற்று 443 ஓட்டங்களை ஜிம்பாப்வே அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்து தமது இன்னிங்ஸை நிறைவு செய்தது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் மஹ்மதுல்லா ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்கள் மற்றும் மொஹமட் மிதுன் 67 ஓட்டங்கள் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் கைல் ஜார்விஸ் மற்றும் டொனால்ட் திரிபானோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.
தொடர்ந்து 443 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு தமது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நேற்று (14) நான்காம் நாள் நிறைவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 76 ஓட்டங்கள் பெற்றிருந்தது.
வெற்றிக்கு மேலும் 367 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் இன்றைய (15) ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி பங்களாதேஷ் அணியின் துள்ளியமான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் மேலதிகமாக 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
அவ்வணியின் துடுப்பாட்டத்தில் பிரண்டன் டைய்லர் அதிக பட்சமாக 106 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தார். இது இப்போட்டியில் அவர் பெற்ற இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பேஷ் லீக்கில் ஸ்டீபன் பிளமிங்குடன் கைக்கோர்க்கும் பிராவோ
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சகலறை வீரர் டுவைன் பிராவோ, அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம்
இதற்கு முன்னர் அவர் 2013 இல் இதே போல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றிருந்ததோடு இரண்டு தடவைகள் இரு இன்னிங்களில் சதம் பெற்ற முதலாவது ஜிம்பாப்வே வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியிருந்தார். சிறப்பாக பந்து வீசிய மெஹ்தி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
போட்டியில் ஆட்ட நாயகனாக இரட்டை சதம் பெற்ற பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவானதுடன் தொடர் நாயகனாக பங்களாதேஷ் பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தெரிவானார்.
போட்டியின் சுருக்கம்
பங்களாதேஷ் அணி (முதல் இன்னிங்ஸ்) 522/7 – முஷ்பிகுர் ரஹீம் 219*, முஃமினுல் ஹக் 161, ஜார்விஸ் 71/5
ஜிம்பாப்வே அணி (முதல் இன்னிங்ஸ்) 304 – பிரண்டன் டைய்லர் 110, பீட்டர் மோர் 83, தைஜுல் இஸ்லாம் 107/5, மெஹ்தி ஹசன் மிராஸ் 61/3
பங்களாதேஷ் அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) 224/6d – மஹ்மதுல்லா 101*, மொஹமட் மிதுன் 67, ஜார்விஸ் 27/2, திரிபானோ 31/2
ஜிம்பாப்வே அணி (இரண்டாவது இன்னிங்ஸ்) 224 பிரண்டன் டைய்லர் 106*, மெஹ்தி ஹசன் மிராஸ் 38/5, தைஜுல் இஸ்லாம் 93/2
முடிவு: பங்களாதேஷ் அணி 218 ஓட்டங்களால் வெற்றி.