பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் டவுண்டனில் இன்று (17) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளது.
உலகக் கிண்ணத் தொடர் வரலாற்றில் 329 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கினை அடைந்து அயர்லாந்து அணி சாதனைபடைத்திருந்த (எதிர் இங்கிலாந்து 2011) நிலையில், அதற்கு அடுத்தபடியாக இன்றைய தினம் பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 322 ஓட்டங்களை அடைந்து குறித்த சாதனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இலங்கையுடனான போட்டியில் முக்கிய வீரரை இழக்கும் இங்கிலாந்து
இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய், அடுத்து நடைபெறவுள்ள…
உலகக் கிண்ண அரையிறுதிக்கான தங்களுடைய வாய்ப்பினை அதிகரித்துக்கொள்ளும் முகமாக இரண்டு அணிகளும் இன்றைய தினம் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வழங்கியது.
பங்களாதேஷ் அணியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஆரம்பத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக கிரிஸ் கெயில் 13 பந்துகளுக்கு எவ்வித ஓட்டங்களும் இன்றி ஆட்டமிழந்தாலும், ஷேய் ஹோப் மற்றும் எவின் லிவிஸ் ஆகியோரது நிதான துடுப்பாட்டம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வலுவளித்தது.
இவர்கள் இருவரும் தங்களுடைய அரைச்சதங்களை பதிவுசெய்ததுடன், அடுத்துவந்த நிக்கோலஸ் பூரன், சிம்ரொன் ஹெட்மையர் அவர்களுடன் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் துடுப்பாட்டத்தில் தங்களுடைய பங்களிப்பையும் குறிப்பிடத்தக்களவு வழங்கியிருந்தனர்.
முக்கியமாக ஷேய் ஹோப் விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் ஓட்டங்களை நிதானமாக பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் சிம்ரொன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் வேகமாக ஓட்டங்களை குவித்தனர். இதில், ஹெட்மையர் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக அரைச்சதம் கடந்தார். இதன்படி, இவ்வருடத்தில் வேகமாக அரைச்சதம் கடந்த பட்டியலில், ஆஸி. அணியின் அலெக்ஸ் கேரியுடன் (25) முதலிடத்தை பகிர்ந்துகொண்டார்.
ஹெட்மையர் மற்றும் ஹோப் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சிறப்பாக துடுப்பாடிக்கொண்டிருந்த நிலையில், முஷ்தபிசூர் ரஹ்மான் தன்னுடைய ஒரே ஓவரில் ஹெட்மையர் மற்றும் என்ரே ரசல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
Photo Album – Sri Lanka vs Australia | ICC Cricket World Cup 2019 – Match 20
எனினும், ஹெட்மையரது இந்த அரைச்சதம், எவின் லிவிசின் 70 ஓட்டங்கள், ஜேசன் ஹோல்டர் 33 ஓட்டங்கள் மற்றும் நிக்கோலஸ் பூரனின் 25 ஓட்டங்கள், ஆட்டத்தின் இறுதியில் விக்கெட்டினை விட்டுக்கொடுத்த ஷேய் ஹோப்பின் 96 ஓட்டங்கள் என துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர் சவாலான வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணி வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கியது. குறிப்பாக தமிம் இக்பால் நிதானமாக துடுப்பெடுத்தாட, சௌமிய சர்க்கார் அதிரடியாக ஓட்டங்களை குவித்தார்.
துரதிஷ்டவசமாக சௌமிய சர்க்கார், அன்ரே ரசலின் பந்துவீச்சில் கிரிஸ் கெயிலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த சகிப் அல் ஹசன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நெருக்கடியை கொடுத்தார். தமிம் இக்பால் மற்றும் சகிப் அல் ஹசன் அரைச்சத இணைப்பாட்டத்தை கடந்ததுடன், பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தடுமாறினர்.
எனினும் தனது அற்புதமான களத்தடுப்பின் மூலம் அரைச்சதத்தை நெருங்கிய தமிம் இக்பாலை, ரன்-அவுட் மூலம் ஷெல்டன் கொட்ரெல் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்துவந்த அனுபவ துடுப்பாட்ட வீரர் முஷ்பிகுர் ரஹீமும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க பங்களாதேஷ் அணி சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனாலும், சகிப் அல் ஹசன் தனியொரு ஆளாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்ததுடன், அவருடன் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த லிட்டன் டாஸும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தார். இவர்கள் இருவரும் இணைந்து பங்களாதேஷ் அணியின் அதிகூடிய நான்காவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தை பகிர்ந்ததுடன், சகிப் அல் ஹசன் தனது 9 ஆவது ஒருநாள் சதத்தையும் கடந்தார். சகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்களையும், லிடன் டாஸ் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
முக்கிய தருணங்களில் விக்கெட்டை இழந்ததால் தோற்றோம் – சர்பராஸ்
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக மென்செஸ்டரில்…
அதேநேரம், இறுதிவரை இருவரும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடியதுடன், பங்களாதேஷ் அணி 41.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இந்த வெற்றியானது பங்களாதேஷ் அணியின் மிகச்சிறந்த ஒருநாள் வெற்றியாகவும், உலகக் கிண்ணத் தொடரில் அதிகூடிய வெற்றி இலக்கை அடைந்த இரண்டாவது சந்தர்ப்பமாகவும் அமைந்திருந்தது.
இதற்கு முன்னர் பங்களாதேஷ் அணி 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 322 என்ற வெற்றி இலக்கை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அடைந்திருந்தது. இம்முறை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை அடைந்து சாதனையை புதுப்பித்துள்ளது.
இதேவேளை. இந்த வெற்றியுடன் பங்களாதேஷ் அணி புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இலங்கை அணி 4 புள்ளிகளுடன் 6 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chris Gayle | c Mushfiqur Rahim b Mohammad Saifuddin | 0 | 13 | 0 | 0 | 0.00 |
Evin Lewis | c Sabbir Rahaman b Shakib Al Hasan (vc) | 70 | 67 | 6 | 2 | 104.48 |
Shai Hope | c Liton Das b Mustafizur Rahman | 96 | 121 | 4 | 1 | 79.34 |
Nicholas Pooran | c Soumya Sarkar b Shakib Al Hasan (vc) | 25 | 30 | 2 | 1 | 83.33 |
Shimron Hetmyer | c Tamim Iqbal b Mustafizur Rahman | 50 | 26 | 4 | 3 | 192.31 |
Andre Russell | c Mushfiqur Rahim b Mustafizur Rahman | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Jason Holder | c Mahmudullah b Mohammad Saifuddin | 33 | 15 | 4 | 2 | 220.00 |
Darren Bravo, | b Mohammad Saifuddin | 19 | 15 | 0 | 2 | 126.67 |
Oshane Thomas | not out | 6 | 11 | 0 | 0 | 54.55 |
Extras | 22 (b 0 , lb 6 , nb 0, w 16, pen 0) |
Total | 321/8 (50 Overs, RR: 6.42) |
Fall of Wickets | 1-6 (3.2) Chris Gayle, 2-122 (24.3) Evin Lewis, 3-159 (32.2) Nicholas Pooran, 4-242 (39.3) Shimron Hetmyer, 5-243 (39.6) Andre Russell, 6-282 (43.4) Jason Holder, 7-297 (46.6) Shai Hope, 8-321 (49.6) Darren Bravo,, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mashrafe Mortaza | 8 | 1 | 37 | 0 | 4.62 | |
Mohammad Saifuddin | 10 | 1 | 72 | 3 | 7.20 | |
Mustafizur Rahman | 9 | 0 | 59 | 3 | 6.56 | |
Mehidy Hasan Miraz | 9 | 0 | 57 | 0 | 6.33 | |
Mosaddek Hossain | 6 | 0 | 36 | 0 | 6.00 | |
Shakib Al Hasan (vc) | 8 | 0 | 54 | 2 | 6.75 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tamim Iqbal | run out (Sheldon Cottrell,) | 48 | 53 | 6 | 0 | 90.57 |
Soumya Sarkar | c Chris Gayle b Andre Russell | 29 | 23 | 2 | 2 | 126.09 |
Shakib Al Hasan (vc) | not out | 124 | 99 | 16 | 0 | 125.25 |
Mushfiqur Rahim | c Shai Hope b Oshane Thomas | 1 | 5 | 0 | 0 | 20.00 |
Liton Das | not out | 94 | 69 | 8 | 4 | 136.23 |
Extras | 26 (b 1 , lb 0 , nb 0, w 25, pen 0) |
Total | 322/3 (41.3 Overs, RR: 7.76) |
Fall of Wickets | 1-52 (8.2) Soumya Sarkar, 2-121 (17.3) Tamim Iqbal, 3-133 (18.6) Mushfiqur Rahim, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Sheldon Cottrell, | 10 | 0 | 65 | 0 | 6.50 | |
Jason Holder | 9 | 0 | 62 | 0 | 6.89 | |
Andre Russell | 6 | 0 | 42 | 1 | 7.00 | |
Shannon Gabriel | 8.3 | 0 | 78 | 0 | 9.40 | |
Oshane Thomas | 6 | 0 | 52 | 1 | 8.67 | |
Chris Gayle | 2 | 0 | 22 | 0 | 11.00 |
முடிவு – பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி