சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில், இலங்கை அணி 97 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
எனினும், பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரினை 2-1 எனக் கைபற்றியிருப்பதன் காரணமாக இப்போட்டியில் கிடைத்த வெற்றி இலங்கை அணிக்கு பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் கிடைத்த ஆறுதல் வெற்றியாக அமைகின்றது.
Video – “3ஆவது போட்டியில் நிரோஷன் டிக்வெல்ல விளையாடுவார்” – கிரேன்ட பிளெவர் | BANvSL
இதேநேரம், இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்கான தமது முதல் புள்ளியினையும் பதிவு செய்திருக்கின்றது.
முன்னதாக டாக்காவில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.
ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கினுள் அடங்கும் இந்த ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பங்களாதேஷ் தொடரினை 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், தொடரின் இறுதிப் போட்டியில் வைட்வொஷ் தோல்வியினை தவிர்க்க இலங்கை அணி கட்டாய வெற்றி ஒன்றினை எதிர்பார்த்து களமிறங்கியது.
இப்போட்டிக்கான இலங்கை அணியில் நான்கு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி இலங்கை அணியில் அறிமுக வீரர்களான சாமிக்க கருணாரட்ன, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பினுர பெர்னாந்து ஆகியோருடன் நிரோஷன் டிக்வெல்ல விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரராக களமிறங்கியிருந்தார். அதேநேரம், இப்போட்டியில் இசுரு உதான, தசுன் ஷானக்க, லக்ஷான் சந்தகன் மற்றும் அஷேன் பண்டார ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
மறுமுனையில் பங்களாதேஷ் அணி வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹமட்டினை மொஹமட் சயீபுத்தினுக்கு பதிலாகவும், மொஹமட் நயீமினை ஆரம்பத் துடுப்பாட்டவீரர் லிடன் தாஸிற்கு பதிலாகவும் களமிறக்கியிருந்தது.
இலங்கை அணி – குசல் பெரேரா (தலைவர்), தனுஷ்க குணத்திலக்க, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, ரமேஸ் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரட்ன, பினுர பெர்னாந்து, துஷ்மன்த சமீர
பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால் (தலைவர்), மொஹமட் நயீம், சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மொசாதிக் ஹொசைன், மஹமதுல்லா, அபிப் ஹொசைன், மெஹிதி ஹஸன், தஸ்கின் அஹமட், சொரிபுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான்
பின்னர் நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களாக வந்த அணித்தலைவர் குசல் பெரேரா மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் சிறந்த ஆரம்பம் வழங்கினர். 82 ஓட்டங்கள் வரை நீடித்த முதல் விக்கெட் இணைப்பாட்டம் தனுஷ்க குணத்திலக்க 39 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போது நிறைவுக்கு வந்தது. தஸ்கின் அஹமட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த தனுஷ்க குணத்திலக்க 33 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரினை விளாசியமை குறிப்பிடத்தக்கது.
இளம் வீரர்களுக்கு சிறிது காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் – அமைச்சர் நாமல்
எனினும் தொடர்ந்து பொறுப்பாக விளையாடிய அணித்தலைவர் குசல் பெரேரா மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோரின் துடுப்பாட்டத்தோடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் முதல் இலங்கை அணித்தலைவராக பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதம் பெற்ற குசல் பெரேரா, தன்னுடைய 6ஆவது ஒருநாள் சதத்துடன் 122 பந்துகளில் 11 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 120 ஓட்டங்களைப் பெற்றார். மறுமுனையில், தனன்ஞய டி சில்வா அவரின் 6ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 55 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் தஸ்கின் அஹமட் 46 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், சொரிபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 287 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் வெறும் 42.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் படுதோல்வியடைந்தது.
கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்ட ஷிரான் பெர்னாந்து
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராட்டம் காட்டிய மஹமதுல்லா அரைச்சதம் பெற்று 53 ஓட்டங்களைக் குவிக்க, மொசாதிக் ஹொசைன் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பங்களாதேஷிற்கு நெருக்கடி உருவாக்கிய துஷ்மந்த சமீர வெறும் 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியினைப் பதிவு செய்ய, வனிந்து ஹஸரங்க மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியினை உறுதி செய்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் துஷ்மந்த சமீர தெரிவு செய்யப்பட தொடர் நாயகன் விருது பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீமிற்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: controllers/Embed.php
Line Number: 86
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: embed/match_result.php
Line Number: 115
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
முடிவு – இலங்கை கிரிக்கெட் அணி 97 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<