சகீபின் சுழலின் மூலம் வரலாற்று சிறப்பு வெற்றியைப் பெற்ற பங்களாதேஷ்

405
Bangladesh vs Australia 1st test

அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் பங்களாதேஷ் அணி டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவை வீழ்த்திய புதிய சாதனையைப் பதிந்துள்ளது.

இந்தப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய பங்களாதேஷ் அணி, தமீம் இக்பால் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோரது சிறந்த இணைப்பாட்டம் மூலம் ஸ்திரமான நிலையை அடைந்தது.

மற்றைய அணிகளிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் : சங்கக்கார

தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள் …

இதன்போது, 155 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்ற தமீம் இக்பால் மற்றும் சகிப் அல் ஹசன் ஜோடி முறையே தங்களது 23வது மற்றும் 22வது அரைச் சதங்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் பங்களாதேஷ் அணி முதல் நாளிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பந்து வீச்சில் நதன் லியோன், கம்மின்ஸ் மற்றும் அகார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர். இவ்விக்கெட்டுக்கள் மூலம் லியோன் டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி சார்பாக 250 விக்கெட்டுக்களைப் பெற்ற 8வது வீரராக தன்னைப் பதிவு செய்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. அவ்வணியின் 3 விக்கெட்டுக்களும் 10 பந்துகளுக்குள் வீழ்ந்ததுடன், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து பெரும் இக்கட்டான நிலையில் தவித்தது.

சகிப் அல் ஹசனின் அபாரமான சுழலில் சிக்கி தமது இன்னிங்சின் ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்த நிலையில் தனது இரண்டாம் நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து சகிப் அல் ஹசனின் சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதல் இன்னிங்சுக்காக 217 ஓட்டங்களைப் பெற்றது.

ரீன்ஸோ, ஹேன்ஸ்கோம் மற்றும் அகார் ஆகியோரது சற்று நிதானமான ஆட்டத்தின் மூலம் அவுஸ்திரேலியா ஓரளவு கௌரவமான நிலையை அடைந்தது. ரீன்ஸோ 45 ஓட்டங்களையும் ஹேன்ட்ஸ்கோம்ப் 33 ஓட்டங்களையும் அகார் 25 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

பந்து வீச்சில் சகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 16வது முறையாக 5 விக்கெட்டுக்களைப் பதிவு செய்தார். அத்துடன் உலகின் டெஸ்ட் அந்தஸ்த்துப் பெற்ற சகல அணிகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுக்களையும் பெற்ற 5 வது வீரராக வரலாற்றில் இடம் பெற்றமை சிறப்பம்சாகும்.

நியுசிலாந்து அணியை விட்டுச் செல்லும் மெக்லெனகன்

நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் மெக்லெனகன் நியுசிலாந்து…

பங்களாதேஷ் அணி சார்பாக மெஹதி ஹசன் 3 விக்கெட்டுக்களையும் தைஜூல் இஸ்லாம் 1 விக்கெட்டினையும் பெற்றனர்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சினைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ஓட்டங்களைப் பெற்றது.  பின்னர் மூன்றாம் நாளை ஆரம்பித்த அவ்வணி லியோனின் சுழலில் சிக்கி அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

தைஜுல் இஸ்லாம் மற்றும் இம்ருல் கைஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் அரங்கு திரும்பினர். நன்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹீம் மற்றும் தமீம் இக்பால் ஜோடி நிதானமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைப்பாட்டமாக 68 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் கம்மின்ஸின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடி கொடுத்து தமீம் ஆட்டமிழந்தார். அவர் பங்களாதேஷ் அணி சார்பாக அதிகபட்ச ஓட்டமான 78 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரது உதவியுடன் பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.  எனவே, ஏற்கனவே பங்களாதேஷ் அணி 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 265 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, தமது இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 27 ஓட்டங்களுக்கு தமது முதல் விக்கெட்டினையும் 28 ஓட்டங்களுக்கு 2வது விக்கெட்டினையும் இழந்து தடுமாற்றத்தை எதிர் நோக்கியது. ரீன்ஸோ 5 ஓட்டங்களுடனும் உஸ்மான் கவாஜா 1 ஓட்டத்துடனும் அரங்கு திரும்பினர்.

மூன்றாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த வோனர் அதிரடியாக ஆட 3ம் நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக டேவிட் வோனர் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

வெற்றி பெற இன்னும் 130 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நிலையில் நான்காம் நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி வோனரின் அதிரடியுடன் மேலும் வலுப்பெற்றது. அதிரடியாக ஆடிய வோனர் டெஸ்ட் அரங்கில் தனது 19வது சதத்தை பூர்த்தி செய்தர். அவர் சகிப் அல் ஹசனின் பந்து வீச்சில் LBW முறையில் 112 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து சகிப் மீண்டும் தனது அபாரமான சுழலின் மூலம் அணித் தலைவர் ஸ்மித் ஐ வீழ்த்த போட்டியின் போக்கு மீண்டும் பங்களாதேஷ் அணிக்கு சார்பாகத் திரும்பியது.

பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே

பார்சிலோனா கால்பந்துக் கழகத்தில் பிரகாசித்து வந்த பிரேசில் வீரர் நெய்மர் டோர்ட்மண்ட்…

இந்த இன்னிங்சிலும் தனது சுழற்பந்து மூலம் அவுஸ்திரேலிய அணியை திக்குமுக்காட வைத்த சகிப், மெக்ஸ்வல், மெத்திவ் வேட் ஆகியோரை சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து தனது 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார். அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற இன்னும் 65 ஓட்டங்கள்தான் தேவை என இருந்த நிலையில் இனி வெற்றி பங்களாதேஷ் பக்கம்தான் என சூழ்நிலை காணப்பட்டது.

எனினும் லியோன் மற்றும் கம்மின்ஸ் ஆகியோரின் இணைப்பாட்டம் மூலம் மீண்டும் அவுஸ்திரேலியாவின் கை சற்று ஓங்கத் தொடங்கியது. இருவரும் இணைப்பாட்டமாக 29 ஓட்டங்களைப் பெற்ற வேளை மெஹதி ஹசனின் பந்து வீச்சில் லியோன் ஆட்டமிழக்க போட்டி மீண்டும் பங்களாதேஷ் பக்கம் திரும்ப ஆரம்பித்தது.

தொடர்ந்து ஆடிய கம்மின்ஸ் மெஹதி ஹசனின் ஒரே ஓவரில் இரு 6 ஆட்டங்களை விளாச அவுஸ்திரேலிய அணி 244 ஓட்டங்களைப் பெற்றது. எனினும் தைஜூல் இஸ்லாமின் பந்து வீச்சில் ஹசல் வூட் ஆட்டமிழக்க பங்காளதேஷ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இரு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய சகிப் அல் ஹசன் போட்டியின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.