இலங்கை மற்றும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் இலங்கை அணியினை பங்களாதேஷ் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.
இவ்வெற்றி பங்களாதேஷ் இளம் கிரிக்கெட் அணிக்கு தொடரில் இரண்டாவது வெற்றியாக மாற, இலங்கை இளம் அணிக்கு இது தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாக மாறியிருக்கின்றது.
>> ஆப்கானுடன் தோல்வியடைந்த இலங்கை இளையோர் அணி
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி அங்கே பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் இளையோர் அணிகள் பங்குபெறும் முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இந்த முக்கோண தொடரில் தாம் இறுதியாக ஆடிய போட்டியில் ஆப்கானுடன் தோல்வியினைத் தழுவிய இலங்கை பங்களாதேஷ் இளம் அணியை நேற்று (26) அபுதாபியின் டோலரன்ஸ் ஓவல் மைானத்தில் எதிர் கொண்டது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் போட்டியில் முதலில் துடுப்பாடியதோடு 48 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை இளம் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தினுர கலுப்பகன நிதான துடுப்பாட்டத்தோடு 49 ஓட்டங்கள் எடுக்க, மறுமுனையில் மல்ஷ தருப்பத்தி 46 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
இதேவேளை, பங்களாதேஷ் பந்துவீச்சில் மரூப் ம்ரிதா மற்றும் ரோஹனத் உல்லா போர்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 216 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கை 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 217 ஓட்டங்களுடன் அடைந்தது.
பங்களாதேஷ் 19 வயதின் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டத்தில் ஜிஸான் அலாம் வெறும் 32 பந்துகளுக்கு அதிரடியாக ஆடி 62 ஓட்டங்களை எடுத்திருந்ததோடு, அஹ்ரார் அமினும் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
>> தம்புள்ள அணிக்காக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷான் பிரியன்ஜன்
இலங்கை இளம் அணி பந்துவீச்சில் தினுர கலுப்பகன 2 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியது.
இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய இலங்கை இந்த முக்கோண ஒருநாள் தொடரில் தமது இறுதி குழுநிலை மோதலில் ஆப்கான் அணியினை செவ்வாய்க்கிழமை (28) எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Hirun Kapurubandara | c Ashiqur Rahman Ruhit b Maruf Mridha | 10 | 9 | 1 | 1 | 111.11 |
Sineth Jayawardena | b Rohanat D Borson | 4 | 8 | 0 | 0 | 50.00 |
Vishen Halambage | c Jishan Alam b Rohanat D Borson | 7 | 14 | 0 | 1 | 50.00 |
Shevon Daniel | b Rohanat D Borson | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dinura Kalupahana | run out (Mahfuzur Rahman Rabby) | 49 | 82 | 3 | 1 | 59.76 |
Vishva Lahiru | c Ashiqur Rahman Ruhit b Tanvir Ahammed | 2 | 16 | 0 | 0 | 12.50 |
Hiran Jayasundara | b Sheikh Paevez Jibon | 35 | 63 | 2 | 0 | 55.56 |
Vishwa Rajapakse | c Tanvir Ahammed b Maruf Mridha | 25 | 38 | 2 | 0 | 65.79 |
Malsha Tharupathi | c Ahrar Amin b Tanvir Ahammed | 46 | 37 | 2 | 3 | 124.32 |
Duvindu Ranathunga | c Mahfuzur Rahman Rabby b Maruf Mridha | 9 | 14 | 0 | 0 | 64.29 |
Traveen Mathew | not out | 5 | 6 | 0 | 0 | 83.33 |
Extras | 23 (b 4 , lb 1 , nb 0, w 18, pen 0) |
Total | 215/10 (48 Overs, RR: 4.48) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Rohanat D Borson | 10 | 1 | 51 | 3 | 5.10 | |
Maruf Mridha | 9 | 0 | 40 | 3 | 4.44 | |
Tanvir Ahammed | 8 | 0 | 41 | 2 | 5.12 | |
Mahfuzur Rahman Rabby | 9 | 1 | 34 | 0 | 3.78 | |
Sheikh Paevez Jibon | 8 | 0 | 23 | 1 | 2.88 | |
Ariful Islam | 3 | 0 | 14 | 0 | 4.67 | |
Jishan Alam | 1 | 0 | 7 | 0 | 7.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Ashiqur Rahman Ruhit | run out (Treveen Mathew) | 30 | 65 | 0 | 0 | 46.15 |
Jishan Alam | lbw b Dinura Kalupahana | 62 | 32 | 6 | 4 | 193.75 |
Sharear Sakib | b Dinura Kalupahana | 3 | 12 | 0 | 0 | 25.00 |
Ariful Islam | run out (Vishwa Rajapakse) | 22 | 45 | 1 | 0 | 48.89 |
Ahrar Amin | not out | 44 | 80 | 0 | 2 | 55.00 |
Shihab James | lbw b Duvindu Ranathunga | 26 | 38 | 3 | 0 | 68.42 |
Mahfuzur Rahman Rabby | not out | 21 | 16 | 3 | 0 | 131.25 |
Extras | 9 (b 0 , lb 4 , nb 1, w 4, pen 0) |
Total | 217/5 (47.5 Overs, RR: 4.54) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Duvindu Ranathunga | 9 | 0 | 44 | 1 | 4.89 | |
Dinura Kalupahana | 9.5 | 1 | 41 | 2 | 4.32 | |
Traveen Mathew | 9 | 1 | 53 | 0 | 5.89 | |
Vishva Lahiru | 10 | 1 | 24 | 0 | 2.40 | |
Malsha Tharupathi | 5 | 0 | 18 | 0 | 3.60 | |
Vishwa Rajapakse | 2 | 0 | 12 | 0 | 6.00 | |
Sineth Jayawardena | 2 | 0 | 11 | 0 | 5.50 | |
Shevon Daniel | 1 | 0 | 10 | 0 | 10.00 |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<