பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 இளையோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த போட்டி தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்ததுடன், அதில் சில மாற்றங்களை மேற்கொண்டு புதிய அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
>>மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பதவியில் மீண்டும் மாற்றம்<<
அதன்படி ஏப்ரல் 24ம் திகதி பயிற்சிப்போட்டியுடன் ஆரம்பமாகும் இந்த தொடரானது மே 8ம் திகதி நிறைவுக்கு வருகின்றது.
போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அட்டவணை
- ஏப்ரல் 24 – பயிற்சிப் போட்டி
- ஏப்ரல் 26 – முதல் ஒருநாள் போட்டி
- ஏப்ரல் 28 – இரண்டாவது ஒருநாள் போட்டி
- மே 01 – மூன்றாவது ஒருநாள் போட்டி
- மே 03 – நான்காவது ஒருநாள் போட்டி
- மே 05 – ஐந்தாவது ஒருநாள் போட்டி
- மே 08 – ஆறாவது ஒருநாள் போட்டி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<