பங்களாதேஷின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியானது ஏப்ரல் – மே மாத இடைவெளிகளில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>2025 ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகும் ஹர்ரி புரூக்
அந்தவகையில் இலங்கை வரும் பங்களாதேஷின் இளம் வயது கிரிக்கெட் வீரர்கள் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியுடன் மொத்தம் ஆறு போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் பங்கேற்கவிருக்கின்றனர்.
அத்துடன் ஒருநாள் தொடருக்கு மேலதிகமாக பயிற்சிப் போட்டியொன்றும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டி அட்டவணை
ஏப்ரல் 24 – பயிற்சிப் போட்டி
ஏப்ரல் 26 – முதல் ஒருநாள் போட்டி
ஏப்ரல் 28 – இரண்டாவது ஒருநாள் போட்டி
மே 01 – மூன்றாவது ஒருநாள் போட்டி
மே 03 – நான்காவது ஒருநாள் போட்டி
மே 06 -ஐந்தாவது ஒருநாள் போட்டி
மே 08 – ஆறாவது ஒருநாள் போட்டி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<