இலங்கை வரும் பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணி

87

இலங்கைக்கு இம்மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பங்களாதேஷின் 19 வயதின் கீழ் மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை வீராங்கனைகளுடன் T20 தொடரில் ஆடுகின்றது.  

இலங்கை – அவுஸ்திரேலியா மோதும் ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில்!

அதன்படி நாளை (02) இலங்கை வந்தடையும் பங்களாதேஷின் இளவயது கிரிக்கெட் வீராங்கனைகள் இம்மாதம் 03ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகும் நான்கு போட்டிகள் கொண்ட T20I தொடரில் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் வீராங்கனைகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர் 

தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் கொழும்பு தர்ஸ்டன் மைதானத்தில் நடைபெறவிருப்பதோடு மூன்றாவது T20 போட்டிக்காக இரு அணிகளும் மக்கோன பயணமாகுகின்றனர் 

தொடர்ந்து தொடரின் நான்காவதும் இறுதியுமான T20 போட்டி இம்மாதம் 09ஆம் திகதி BRC மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தொடரின் அனைத்துப் போட்டிகளும் பகல் நேர ஆட்டங்களாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.   

தொடர் அட்டவணை  

  • ஜனவரி 03 – முதல் T20 போட்டிதர்ஸ்டன் மைதானம்மதியம் 2 மணி  
  • ஜனவரி 05 – இரண்டாவது T20 போட்டிதர்ஸ்டன் மைதானம்மதியம் 2 மணி  
  • ஜனவரி 07 – மூன்றாவது T20 போட்டிமக்கோன, சர்ரேய்காலை 10 மணி  
  • ஜனவரி 09 – நான்காவது T20 போட்டி – BRC – காலை 10 மணி 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<