இலங்கை வரும் பங்களாதேஷ் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

116

பங்களாதேஷின் 17 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை (17 வயதின் கீழ்) வீரர்களுடன் ஒருநாள் மற்றும் மூன்று நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

Prima U15 இளையோர் கிரிக்கெட் லீக் தொடர் இந்த வாரம் ஆரம்பம்

இரு அணிகளுக்கும் இடையிலான சுற்றுத் தொடர் இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகும் ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகுவதோடு, ஒருநாள் தொடரின் பின்னர் இரு போட்டிகள் கொண்ட மூன்று நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டித் தொடர் டிசம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பமாகுவது சுட்டிக்காட்டத்தக்கது 

அத்துடன் இலங்கைபங்களாதேஷ் ஆகியவற்றின் 17 வயதின் கீழ்ப்பட்ட  அணிகள் பங்கெடுக்கும் போட்டிகள் யாவும் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது 

அதேவேளை இந்த தொடர்களில் பங்கெடுப்பதற்கான இலங்கையின் 17 வயதின்கீழ்ப்பட்ட அணியானது தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் (National Pathway Programme) ஊடாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் 

போட்டித்தொடர் அட்டவணை 

ஒருநாள் தொடர்  

  • முதல் ஒருநாள் போட்டிநவம்பர் 24  
  • இரண்டாவது ஒருநாள் போட்டிநவம்பர் 26 
  • மூன்றாவது ஒருநாள் போட்டிநவம்பர் 28 
  • மூன்று நாள் (முதல்தர) தொடர்  
  • முதல் போட்டிடிசம்பர் 01 தொடக்கம் 03 வரை  
  • இரண்டாவது போட்டிடிசம்பர் 06 தொடக்கம் 08 வரை 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<