இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையில் ஜூலை மாதம் நடைபெறவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உறுதி செய்திருக்கின்றது.
மொர்தஸா உட்பட மூன்று பங்களாதேஷ் வீரர்களுக்கு கொரோனா தொற்று
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக நடைபெறவிருந்த இந்த டெஸ்ட் தொடருக்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களால் அவர்களது நாட்டில் இருக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தயாராக முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, பங்களாதேஷ் வீரர்களுக்கு பயிற்சிகள் பெறுவதற்கான சூழல் ஒன்று கிடைக்காத நிலையிலையே டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம், டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்படும் முடிவு இலங்கை – பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளினதும் கிரிக்கெட் சபைகளின் ஒப்புதளோடு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை, இந்த டெஸ்ட் தொடரினை நடாத்துவதற்கான வேறு ஒரு திகதியும் பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அதோடு, இலங்கை கிரிக்கெட் அணிக்கு பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்ட நான்காவது கிரிக்கெட் தொடராக மாறியிருக்கின்றது.
லங்கன் ப்ரீமியர் லீக்கிற்கு அனுமதி வழங்கியது அரசாங்கம்!
முன்னதாக, இலங்கை வீரர்கள் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் விளையாடவிருந்த கிரிக்கெட் தொடர்களும் கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க…