Home Tamil ப்ரவீனின் வரலாற்று சாதனையுடன் தொடரை வென்றது இலங்கை

ப்ரவீனின் வரலாற்று சாதனையுடன் தொடரை வென்றது இலங்கை

Bangladesh tour of Sri Lanka 2021

280

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்ட இலங்கை அணி 2018ம் ஆண்டுக்கு பின்னர் சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இலங்கை அணி நிர்ணயித்திருந்த 437 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 227 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தொடரை 0-1 என இழந்தது.

டெஸ்ட் தொடர் வெற்றியை நெருங்கியுள்ள இலங்கை அணி

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், ரமேஷ் மெண்டிஸ், ப்ரவீன் ஜயவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ

பங்களாதேஷ் அணி

தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், சொரிபுல் இஸ்லாம்

போட்டியின் நான்காவது நாளான நேற்றைய ஆட்டநேர நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி பெற்றிருந்தது. அதன்படி, இன்றைய தினம் களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்ட வீரர் லிடன் டாஸ் 17 ஓட்டங்களுடன் ப்ரவீன் ஜயவிக்ரமவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய துடுப்பாட்ட வீரர்களில் மெஹிதி ஹாசன் மாத்திரம் அதிகபட்சமாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். இதனடிப்படையில் 227 ஓட்டங்களுக்கு பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

பங்களாதேஷ் அணிசார்பில், மெஹிதி ஹாசனுக்கு அடுத்தப்படியாக , முஷ்பிகூர் ரஹீம் 40 ஓட்டங்களையும், சயீப் ஹசன் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில், அறிமுக பந்துவீச்சாளர் ப்ரவீன் ஜயவிக்ரம இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட் பிரதியை கைப்பற்ற, ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி லஹிரு திரிமான்ன மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் சதங்கள் மற்றும் நிரோஷன் டிக்வெல்லவின் வேகமான அரைச்சதம் என்பவற்றின் ஊடாக 493/7 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் டஸ்கின் அஹமட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பங்களாதேஷ் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்தது. பங்களாதேஷ் அணிக்கு தமிம் இக்பால் 92 ஓட்டங்களை குவித்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அதிக ஓட்டங்களை குவிக்காத நிலையில், 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 

பங்களாதேஷ் அணி சார்பில் தமிம் இக்பாலுக்கு அடுத்தப்படியாக மொமினுல் ஹக் 49 ஓட்டங்களையும், முஷ்பிகூர் ரஹீம் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 6 விக்கெட்டுகளை வீழ்த்த, சுரங்க லக்மால் மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 194 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்த போது, ஆட்டத்தை இடைநிறுத்தி பங்களாதேஷ் அணிக்கு 437 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது. இலங்கை அணிசார்பாக திமுத் கருணாரத்ன 66 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள, பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தாஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இலங்கை அணி இன்றைய தினம் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் 2018ம் ஆண்டுக்கு பின்னர் தங்களுடைய முதல் டெஸ்ட் வெற்றியை சொந்த மண்ணில் பதிவுசெய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி 2-0 என கைப்பற்றியிருந்தது. 

கன்னி டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்த ப்ரவீன் ஜயவிக்ரம

இதனைத்தொடர்ந்து இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 1-1 என சமப்படுத்தியதுடன், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 2-0 என இழந்திருந்தது. 

அதேநேரம், தன்னுடைய கன்னி டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய ப்ரவீன் ஜயவிக்ரம, அறிமுக டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் பிரதியை கைப்பற்றிய முதல் இலங்கை வீரர் மற்றும் முதல் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இதற்கு முதல் இந்தியாவின் நரேந்திர ஹிரவானி, பாகிஸ்தானின் மொஹமட் சயீன் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜேசன் க்ரீஷா ஆகியோர் கன்னி டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் பிரதியை கைப்பற்றி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Result


Sri Lanka
493/7 (159.2) & 194/9 (42.2)

Bangladesh
251/10 (51) & 227/10 (71)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Liton Das b Shaiful Islam 118 190 15 0 62.11
Lahiru Thirimanne c Liton Das b Taskin Ahamed 140 253 15 0 55.34
Oshada Fernando c Liton Das b Mehidy Hasan Miraz 81 221 8 0 36.65
Angelo Mathews c Liton Das b Taskin Ahamed 5 15 1 0 33.33
Dhananjaya de Silva c Najmul Hossain Shanto b Taijul Islam 2 9 0 0 22.22
Pathum Nissanka b Taskin Ahamed 30 84 3 0 35.71
Niroshan Dickwella not out 77 72 8 1 106.94
Ramesh Mendis c Mushfiqur Rahim b Taskin Ahamed 33 68 2 0 48.53


Extras 7 (b 3 , lb 2 , nb 1, w 1, pen 0)
Total 493/7 (159.2 Overs, RR: 3.09)
Fall of Wickets 1-209 (63.1) Dimuth Karunarathne, 2-313 (104.1) Lahiru Thirimanne, 3-319 (108.1) Angelo Mathews, 4-328 (111.5) Dhananjaya de Silva, 5-382 (135.4) Pathum Nissanka, 6-382 (136.2) Oshada Fernando,

Bowling O M R W Econ
Abu Jayed 22 4 69 0 3.14
Taskin Ahamed 34.2 7 127 4 3.71
Mehidy Hasan Miraz 36 7 118 1 3.28
Shaiful Islam 29 6 91 1 3.14
Taijul Islam 38 7 83 1 2.18
Batsmen R B 4s 6s SR
Tamim Iqbal c Lahiru Thirimanne b 92 15 12 0 613.33
Saif Hassan c Dhananjaya de Silva b 25 62 4 1 40.32
Najmul Hossain Shanto c Lahiru Thirimanne b Ramesh Mendis 0 4 0 0 0.00
Mominul Haque lbw b Ramesh Mendis 49 104 7 0 47.12
Mushfiqur Rahim lbw b 40 62 7 0 64.52
Liton Das c Lahiru Thirimanne b 8 11 2 0 72.73
Mehidy Hasan Miraz lbw b Suranga Lakmal 16 33 1 0 48.48
Taijul Islam hit-wicket b 9 50 1 0 18.00
Taskin Ahamed lbw b 0 11 0 0 0.00
Shaiful Islam b Suranga Lakmal 0 8 0 0 0.00
Abu Jayed not out 0 4 0 0 0.00


Extras 12 (b 2 , lb 9 , nb 1, w 0, pen 0)
Total 251/10 (51 Overs, RR: 4.92)
Fall of Wickets 1-98 (25.4) Saif Hassan, 2-151 (43.2) Tamim Iqbal,

Bowling O M R W Econ
Suranga Lakmal 10 0 30 2 3.00
Vishwa Fernando 7 1 19 0 2.71
Angelo Mathews 2 0 7 0 3.50
Ramesh Mendis 31 7 86 2 2.77
Dhananjaya de Silva 1 0 6 0 6.00
Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Najmul Hossain Shanto b Mehidy Hasan Miraz 2 6 0 0 33.33
Dimuth Karunarathne c Tamim Iqbal b Saif Hassan 66 78 7 1 84.62
Oshada Fernando st Liton Das b Taijul Islam 1 5 0 0 20.00
Angelo Mathews c Saif Hassan b Taijul Islam 12 35 0 1 34.29
Dhananjaya de Silva c Najmul Hossain Shanto b Mehidy Hasan Miraz 41 52 4 1 78.85
Pathum Nissanka c Shaiful Islam b Taijul Islam 24 31 2 0 77.42
Niroshan Dickwella c Taijul Islam b Taskin Ahamed 24 25 2 0 96.00
Ramesh Mendis c Tamim Iqbal b Taijul Islam 8 12 1 1 66.67
Suranga Lakmal b Taijul Islam 12 6 0 0 200.00
Praveen Jayawickrama not out 3 5 0 0 60.00


Extras 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0)
Total 194/9 (42.2 Overs, RR: 4.58)
Bowling O M R W Econ
Mehidy Hasan Miraz 14 3 66 2 4.71
Shaiful Islam 1 0 8 0 8.00
Taijul Islam 19.2 2 72 5 3.75
Taskin Ahamed 4 0 26 1 6.50
Saif Hassan 4 0 22 1 5.50


Batsmen R B 4s 6s SR
Tamim Iqbal c Niroshan Dickwella b Ramesh Mendis 24 26 3 1 92.31
Saif Hassan c Suranga Lakmal b Praveen Jayawickrama 34 46 5 1 73.91
Najmul Hossain Shanto b Praveen Jayawickrama 26 44 4 0 59.09
Mominul Haque b Ramesh Mendis 32 48 4 0 66.67
Mushfiqur Rahim c Dhananjaya de Silva b Ramesh Mendis 40 63 5 0 63.49
Liton Das lbw b Praveen Jayawickrama 17 46 1 0 36.96
Mehidy Hasan Miraz c Pathum Nissanka b Praveen Jayawickrama 39 89 4 0 43.82
Taijul Islam c Niroshan Dickwella b Dhananjaya de Silva 2 30 0 0 6.67
Taskin Ahamed c Dimuth Karunarathne b Ramesh Mendis 7 33 0 0 21.21
Shaiful Islam not out 0 2 0 0 0.00
Abu Jayed lbw b Praveen Jayawickrama 0 3 0 0 0.00


Extras 6 (b 3 , lb 2 , nb 1, w 0, pen 0)
Total 227/10 (71 Overs, RR: 3.2)
Fall of Wickets 1-31 (7.1) Tamim Iqbal, 2-73 (16.4) Saif Hassan, 3-104 (22.5) Najmul Hossain Shanto, 4-134 (31.6) Mominul Haque, 5-171 (41.4) Mushfiqur Rahim, 6-183 (50.2) Liton Das, 7-206 (61.2) Taijul Islam, 8-227 (69.4) Taskin Ahamed, 9-227 (70.3) Mehidy Hasan Miraz, 10-227 (70.6) Abu Jayed,

Bowling O M R W Econ
Suranga Lakmal 4 2 14 0 3.50
Ramesh Mendis 28 2 103 4 3.68
Praveen Jayawickrama 32 10 86 5 2.69
Dhananjaya de Silva 7 1 19 1 2.71



மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…