இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர நிறைவில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுள்ளது.
கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
>> உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் – ஐ.சி.சி
இலங்கை அணி
திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, அஞ்செலோ மெதிவ்ஸ், பெதும் நிஸ்ஸங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ
பங்களாதேஷ் அணி
தமிம் இக்பால், சயிப் ஹசன், நஜ்முல் ஹுசைன் செண்டோ, மொமினுல் ஹக் (தலைவர்), முஷ்பிகூர் ரஹீம், லிடன் டாஸ், மெஹிடி ஹாசன், தாஜுல் இஸ்லாம், டஸ்கின் அஹமட், அபு ஜெயட், எப்டொட் ஹுசைன்
இலங்கை அணிசார்பில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து, பாதியில் நாடு திரும்பிய அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் டெஸ்ட் குழாத்தில் இணைக்கப்பட்டதுடன், லஹிரு குமாரவும் குழாத்தில் இடம்பிடித்தார். எனினும், அனுபவ மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் குழாத்திலிருந்து நீக்கப்பட்டார்.
நாணய சுழற்சிக்கு ஏற்ப களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சயீப் ஹசனை, ஓட்டங்களின்றிய நிலையில், விஷ்வ பெர்னாண்டோ ஆட்டமிழக்கசெய்தார். பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டிருந்தது.
எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் மற்றும் நஜ்முல் ஹுசைன் சென்டோ ஆகியோர் துள்ளியமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், தமிம் இக்பால் அரைச்சதம் கடக்க, பங்களாதேஷ் அணி மதியபோசன இடைவேளையின் போது, ஒரு விக்கெட்டினை இழந்து 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மதியபோசன இடைவேளைக்கு பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு சவால் கொடுத்த போதிலும் 90 ஓட்டங்களை குவித்திருந்த தமிம் இக்பால், விஷ்வ பெர்னாண்டோவின் பந்துவீச்சில் லஹிரு திரிமான்னவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனாலும் மறுமுனையில் இருந்த நஜ்முல் ஹுசைன் சென்டோ, தன்னுடைய கன்னி டெஸ்ட் சதத்தை நோக்கி பயணிக்க, அணித்தலைவர் மொமினுல் ஹக் அவருக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார். இந்த இணைப்பாட்டத்தால் பங்களாதேஷ் அணி, தேநீர் இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து தேநீர் இடைவேளையின் பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு, இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களால் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. தன்னுடைய கன்னி டெஸ்ட் சதத்தை நோக்கி பயணித்த நஜ்முல் ஹுசைன் சென்டோ, கன்னி டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தார்.
டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தது மாத்திரமின்றி, இன்றைய நாள் ஆட்டநேர இறுதிவரை துடுப்பெடுத்தாடிய நஜ்முல் ஹுசைன் சென்டோ 126 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் மொமினுல் ஹக் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில், விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், இன்றைய ஆட்டநேர நிறைவில் பலமான ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்து, இலங்கை அணிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: controllers/Embed.php
Line Number: 86
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
A PHP Error was encountered
Severity: Warning
Message: Invalid argument supplied for foreach()
Filename: embed/match_result.php
Line Number: 115
Backtrace:
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view
File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<