Home Tamil பங்களாதேஷை வைட்வொஷ் முறையில் வீழ்த்தியது இலங்கை

பங்களாதேஷை வைட்வொஷ் முறையில் வீழ்த்தியது இலங்கை

4661
Sri Lanka Cricket 2019

பங்களாதேஷ் அணிக்கு எதிராக கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, 44 மாதங்களுக்கு பின்னர் 3-0 என வைட்வொஷ் முறையில் ஒருநாள் தொடரொன்றை கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியது. நுவன் பிரதீப், தனன்ஜய டி சில்வா, இசுரு உதான மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்குப் பதிலாக கசுன் ராஜித, ஷெஹான் ஜயசூரிய, தசுன் ஷானக மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டிருந்தனர். 

மூன்று வருடங்களில் முதல் வைட்வொஷ் வெற்றிக்காக இலங்கை அணி

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி…

பங்களாதேஷ் அணியை பொருத்தவரை உபாதைக்குள்ளாகியிருக்கும் முஸ்தபிசூர் ரஹ்மான் மற்றும் மொஸாதிக் ஹுசைன் ஆகியோருக்கு பதிலாக ரூபல் ஹுசைன் மற்றும் அனாமுல் ஹக் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை அணி 

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாந்து, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், வனிந்து ஹசரங்க, செஹான் ஜயசூரிய, அகில தனன்ஜய, லஹிரு குமார, கசுன் ராஜித, தசுன் ஷானக

பங்களாதேஷ் அணி 

தமிம் இக்பால் (தலைவர்), சௌம்யா சர்க்கார், மொஹமட் மிதுன், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லாஹ், அனாமுல் ஹக், சப்பீர் ரஹ்மான், மெஹிதி ஹஸன், தய்ஜூல் இஸ்லாம், சபியுல் இஸ்லாம், ரூபல் ஹுசைன்

இந்த மாற்றங்களுடன் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.  அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்க பெர்னாண்டோ (07) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார். எனினும், இதற்கு அடுத்தபடியாக ஜோடி சேர்ந்த திமுத் கருணாரத்ன மற்றும் குசல் பெரேரா ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பி, ஓட்டங்களை வேகமாக குவித்தனர்.

குறித்த இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 83 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களுடனும், குசல் பெரேரா 42 ஓட்டங்களுடனும் குறுகிய இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இவர்களின் ஆட்டமிழப்பு இலங்கை அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்தாலும், குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் நிதானமான இணைப்பாட்டமொன்றை பகிர்ந்தனர்.

மெண்டிஸ் மற்றும் மெதிவ்ஸ் ஆகியோரின் நிதானமான ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி 200 ஓட்டங்களை நெருங்க, அரைச் சதம் கடந்த மெண்டிஸ் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மெண்டிஸின் ஆட்டமிழப்பின் பின்னர், மெதிவ்ஸ் அரைச்சதம் கடக்க, புதிய துடுப்பாட்ட வீரரான தசுன் ஷானக வெறும் 14 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை வேகமாக பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

Photo Album – Sri Lanka vs Bangladesh | 3rd ODI

எவ்வாறாயினும், இறுதி ஓவர் வரை களத்தில் நின்று போராட்டமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய அஞ்செலோ மெதிவ்ஸ், 90 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களை பெற, பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களும் பங்காற்ற இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் சபியுல் இஸ்லாம் மற்றும் சௌமிய சர்கார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

பின்னர், தங்களுடைய துடுப்பாட்ட இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரையில் ஆரம்பம் முதல் ஏமாற்றமே காத்திருந்தது. இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில் விளையாடாத போதும், கசுன் ராஜித, தசுன் ஷானக உட்பட இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியை கொடுத்திருந்தனர்.

கடந்த போட்டிகளை போன்று பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தமிம் இக்பால் மற்றும் அனாமுல் ஹக் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி, கசுன் ராஜித இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தெடர்ந்து துடுப்பாட்டத்தில் வேகமாக ஓட்டங்களை குவித்து அசத்தியிருந்த தசுன் ஷானக, பந்துவீச்சிலும் மிகச்சிறப்பாக செயற்பட்டார்.  முஸ்தபிகூர் ரஹீம், மொஹமட் மிதுன் மற்றும் மொஹமதுல்லாஹ் ஆகிய பங்களாதேஷ் அணியின் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை இவர் கைப்பற்றினார்.

மத்தியவரிசை வீரர்களின் சரிவுக்கு பின்னர், சௌமிய சர்க்கார் பங்களாதேஷ் அணியை சற்று மதிக்கத்தக்க ஓட்ட எண்ணிக்கைக்கு அழைத்துச் சென்றார். இவர் தன்னுடைய 11ஆவது ஒருநாள் அரைச் சதத்தை பதிவுசெய்த போதிலும், அகில தனன்ஜயவின் பந்துவீச்சில் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதற்கிடையில், லஹிரு குமார தனது வேகத்தால், பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க, பங்களாதேஷ் அணி 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, தசுன் ஷானக 3 விக்கெட்டுகளை அதிகபட்சமாக வீழ்த்த, லஹிரு குமார, கசுன் ராஜித ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும், அகில தனன்ஜய மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் அடிப்படையில் துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு என அனைத்து துறையிலும் இந்தப் போட்டியில் சிறப்பாக சோபித்திருந்த இலங்கை அணி, இலகுவான வெற்றியை பெற்று, தொடரை வைட்வொஷ் முறையில் கைப்பற்றியது. இதற்கு முன்னர், 2015ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியை 3-0 என வீழ்த்தி வைட்வொஷ் முறையில் இலங்கை அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka
294/8 (50)

Bangladesh
172/10 (36)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando b Shaiful Islam 6 14 0 0 42.86
Dimuth Karunaratne c Mushfiqur Rahim b Taijul Islam 46 60 6 0 76.67
Kusal Perera c Mushfiqur Rahim b Rubel Hossain 42 51 5 0 82.35
Kusal Mendis c Sabbir Rahaman b Soumya Sarkar 54 58 5 1 93.10
Angelo Mathews c Mushfiqur Rahim b Soumya Sarkar 87 90 7 1 96.67
Dasun Shanaka c Sabbir Rahaman b Shaiful Islam 30 14 2 2 214.29
Shehan Jayasuriya c Tamim Iqbal b Shaiful Islam 13 7 1 1 185.71
Nuwan Thushara not out 12 5 2 0 240.00
Akila Dananjaya c Sabbir Rahaman b Soumya Sarkar 0 1 0 0 0.00
Kasun Rajitha not out 0 0 0 0 0.00


Extras 4 (b 0 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 294/8 (50 Overs, RR: 5.88)
Fall of Wickets 1-13 (4.3) Avishka Fernando, 2-96 (20.2) Dimuth Karunaratne, 3-98 (21.2) Kusal Perera, 4-199 (41.3) Kusal Mendis, 5-251 (46.1) Dasun Shanaka, 6-280 (48.4) Shehan Jayasuriya, 7-284 (49.1) Angelo Mathews, 8-284 (49.2) Akila Dananjaya,

Bowling O M R W Econ
Shaiful Islam 10 2 68 3 6.80
Rubel Hossain 9 1 55 1 6.11
Taijul Islam 10 1 34 1 3.40
Mehidy Hasan Miraz 9 0 59 0 6.56
Soumya Sarkar 9 0 56 3 6.22
Mahmudullah 3 0 22 0 7.33


Batsmen R B 4s 6s SR
Anamul Haque c Avishka Fernando b Kasun Rajitha 14 24 2 0 58.33
Tamim Iqbal c Kusal Perera b Kasun Rajitha 2 6 0 0 33.33
Soumya Sarkar b Akila Dananjaya 69 86 5 1 80.23
Mushfiqur Rahim c Kusal Mendis b Dasun Shanaka 10 15 1 0 66.67
Mohammad Mithun c Lahiru Kumara b Dasun Shanaka 4 11 0 0 36.36
Mahmudullah c Kusal Perera b Dasun Shanaka 9 12 1 0 75.00
Sabbir Rahaman c Dhananjaya de Silva b Lahiru Kumara 7 17 0 0 41.18
Mehidy Hasan Miraz c Dhananjaya de Silva b Lahiru Kumara 8 6 2 0 133.33
Taijul Islam not out 39 28 5 1 139.29
Shaiful Islam st Kusal Perera b Nuwan Thushara 1 5 0 0 20.00
Rubel Hossain run out (Kusal Perera) 2 6 0 0 33.33


Extras 7 (b 0 , lb 2 , nb 0, w 5, pen 0)
Total 172/10 (36 Overs, RR: 4.78)
Fall of Wickets 1-4 (1.3) Tamim Iqbal, 2-29 (7.6) Anamul Haque, 3-46 (11.6) Mushfiqur Rahim, 4-60 (15.4) Mohammad Mithun, 5-83 (19.4) Mahmudullah, 6-105 (24.4) Sabbir Rahaman, 7-117 (26.4) Mehidy Hasan Miraz, 8-143 (31.5) Soumya Sarkar, 9-149 (33.1) Shaiful Islam, 10-172 (35.6) Rubel Hossain,

Bowling O M R W Econ
Shehan Jayasuriya 6 0 40 0 6.67
Kasun Rajitha 5 0 17 2 3.40
Akila Dananjaya 10 0 44 1 4.40
Dasun Shanaka 6 0 27 3 4.50
Nuwan Thushara 4 1 16 1 4.00
Lahiru Kumara 5 0 26 2 5.20