மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20 குழாமை அறிவித்தது பங்களாதேஷ்

276

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 15 பேர் கொண்ட அணிக்குழாமை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இன்று (14) அறிவித்துள்ளது.

ஷாய் ஹோப்பின் சதத்தால் பங்களாதேஷுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த மேற்கிந்திய தீவுகள்

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப்பின் அற்புத சதத்தின் மூலம் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள்…

அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட குழாமில், மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் T20 குழாமில் இடம்பெற்றிருந்த அபு ஜெயாட்டுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. T20 குழாமுடன், மேற்கிந்திய தீவுகள் சென்றிருந்த அபு ஜெயாட், குறித்த தொடரின் ஒரு போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை.

இவருடன், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஆறுமாத போட்டித் தடைக்கு முகங்கொடுத்துள்ள சபீர் ரஹ்மான் அணியில் இணைக்கப்படவில்லை என்பதுடன், இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடிய மொஷ்டாக் ஹுசைனும் T20 குழாமில் இணைக்கப்படவில்லை.

இந்நிலையில், 27 வயதான துடுப்பாட்ட வீரர் மொஹமட் மித்துன் T20 குழாமில் பெயரிடப்பட்டுள்ளார். முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கான பயணத்தில் இணைக்கப்படாத இவர், ஆசியக் கிண்ணத் தொடரில் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடந்த மாதம் அறிமுகமாகியிருந்தார். தொடர்ந்து சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவர், பெப்ரவரி மாததிற்கு பின்னர் T20 குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற T20 தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் மொஹமட் சய்புதீன் மீண்டும் T20 குழாமில் இடம்பிடித்துள்ளார்.

இதேவேளை, அணிக்குழாம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் தேர்வுக்குழு தலைவர் மின்ஹாஜுல் அபிதின், “பின்வரிசையில் துடுப்பெடுத்தாடுவதற்கு சிறந்த வீரர் ஒருவர் தேவையென்பதால் மொஹமட் மித்துனை அணியில் இணைத்துள்ளோம். கடந்த சில மாதங்களாக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சவால்களுக்கு மத்தியில் நியூசிலாந்தில் களமிறங்கவுள்ள இலங்கை அணி – Cricket Kalam 03

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி எதிர்த்து போராட வேண்டிய சவால்கள், அகில…

அதேநேரம், வேகப்பந்து வீசக்கூடிய சகலதுறை வீரருக்கான இடத்தை மொஹமட் சய்பூதீன் பிடித்துள்ளார்.  இவரின் வருகையின் காரணமாக அபு ஜெயாட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அத்துடன், மொஷ்டாக் ஹுசைன் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடியதால், அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

பங்களாதேஷ் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர், எதிர்வரும் 17ஆம் திகதி சில்ஹெட்டில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் T20 குழாம்

சகிப் அல் ஹசன் (தலைவர்), தமிம் இக்பால், சௌம்ய சர்கார், லிடன் டாஸ், முஷ்பிகூர் ரஹீம், மொஹமதுல்லா, ரூபல் ஹுசைன், முஷ்தபிசூர் ரஹ்மான், மெஹிடி ஹசன், நஸ்முல் இஸ்லாம், மொஹமட் மித்துன், மொஹமட் சய்புதீன், அபு ஹய்டர் ரோனி, ஹரிபுல் ஹக்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<